வசூலில் ரூ.100 கோடியை நெருங்கும் துல்கரின் ‘லக்கி பாஸ்கர்’ படம்!
Lucky Bhaskar Box Office Collection: மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்த துல்கர் ஒரு பேங்கில் கேஷியராக பணிபுரிகிறார். மாத வருமானம் அப்பாவின் மருத்துவ செலவிற்கும் தம்பி, தங்கை கல்லூரி படிப்புக்கும், தனது 6 வயது மகனின் பள்ளி செலவிற்கும் பத்தாமலே செல்கிறது. ஊரை சுற்றி கடனால் வாடும் துல்கரின் காதல் மனைவிதான் மீனாட்சி சவுத்ரி. தனது கணவனின் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத மனைவியாக தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். குடும்ப கஷ்டத்தை தனது கணவருடன் இணைந்து சரி செய்ய முயற்சிக்கும் மனைவியாக நடித்திருந்தார்.
நடிகர் துல்கர் சல்மானின் நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ படம் வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ படத்தை இயக்கியதன் மூலம் கோலிவுட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் இயக்குநர் வெங்கி அட்லுரி. இதனைத் தொடர்ந்து இவர் துல்கர் சல்மானை வைத்து தற்போது ‘லக்கி பாஸ்கர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். பான் இந்தியன் படமாக உருவாகியுள்ள இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த நிலையில் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
நடிகர் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபலமான நடிகராக இருக்கிறார். கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் 1983-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி துல்கர் சல்மான் பிறந்தார். சினிமாவில் நடிப்பதற்கு எண்ட்ரி கொடுப்பதற்கு முன் பேரி ஜான் ஆக்டிங் ஸ்டுடியோவில் மூன்று மாத நடிப்புப் படிப்பை படித்துள்ளார்.
கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘செக்கண்ட் ஷோ’ என்ற படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார் துல்கர். அதனை தொடர்ந்து வெளியான ‘உஸ்தாத் ஹோட்டல்’ படம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைக் கொடுத்தது. பின்னர் துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியான ஏபிசிடி, நீலாகாஷம் பச்சைக்கடல் செவ்வண்ண பூமி, பேங்களூர் டேய்ஸ் படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
2014-ம் ஆண்டு வெளியான வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் துல்கர் சல்மான். அதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி,தேசிங்கு பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றார் துல்கர்.
படங்களுக்காக உடல் எடையை கூட்டுவது, குறைப்பது என பெரிய மெனக்கெடல் எதுவும் இல்லாமல் படங்களில் நடித்தாலும் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் துல்கர். அந்த வகையில் இவரது நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘லக்கி பாஸ்கர்’ நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்த துல்கர் ஒரு பேங்கில் கேஷியராக பணிபுரிகிறார். மாத வருமானம் அப்பாவின் மருத்துவ செலவிற்கும் தம்பி, தங்கை கல்லூரி படிப்புக்கும், தனது 6 வயது மகனின் பள்ளி செலவிற்கும் பத்தாமலே செல்கிறது.
Also read… சேலையில வீடு கட்டவா… நடிகை ஜான்வியின் லேட்டஸ்ட் ஆல்பம்!
ஊரை சுற்றி கடனால் வாடும் துல்கரின் காதல் மனைவிதான் மீனாட்சி சவுத்ரி. தனது கணவனின் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத மனைவியாக தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். குடும்ப கஷ்டத்தை தனது கணவருடன் இணைந்து சரி செய்ய முயற்சிக்கும் மனைவியாக நடித்திருந்தார்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த துல்கருக்கு ஏமாற்றம் கிடைக்க வங்கியில் இருந்து பணத்தை கைமாத்தும் வேலையில் ஈடுபடுகிறார் துல்கர். இதன் காரணமாக தனது குடும்பத்தின் பண பிரச்னையில் இருந்து மீழ்கிறார் துல்கர்.
தொடர்ந்து பேங்கில் பணத்தை எடுத்து கைமாற்றி பல தொழில்களில் ஈடுபடும் துல்கர் மாட்டிக் கொள்கிறாரா இல்லையா என்பதே படத்தின் கதை. படம் வெளியான போது தமிழகத்தில் பெரிய அளவில் திரையரங்குகள் கிடைக்கவில்லை என்றாலும் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளனர்.
The 𝑫𝑰𝑾𝑨𝑳𝑰 𝑴𝑬𝑮𝑨 𝑩𝑳𝑶𝑪𝑲𝑩𝑼𝑺𝑻𝑬𝑹 continues its Terrific run on weekdays at the Box-office! 🔥#LuckyBaskhar grossed over 𝟔𝟕.𝟔 𝐂𝐑+ 𝐖𝐨𝐫𝐥𝐝𝐰𝐢𝐝𝐞 in 𝟔 𝐃𝐀𝐘𝐒! 💰 🤩#BlockbusterLuckyBaskhar In Cinemas Now – Book your tickets 🎟 ~… pic.twitter.com/ws6DmkqK1j
— Sithara Entertainments (@SitharaEnts) November 6, 2024
இந்த நிலையில் படத்தின் வசூல் கொடி கட்டிப் பறக்கிறது. அதன்படி படம் தற்போது வரை உலகம் முழுவதும் 6 நாட்களில் ரூ.67.6 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வார இறுதியில் இத்திரைப்படம் 100 கோடி வரை வசூலிக்கும் என்று எதிர்பாக்கப்படுகின்றது.