5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பாடல்கள் மீது எந்த உரிமையும் இளையராஜா கோர முடியாது – நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் வாதம்

Ilaiyaraaja: எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளர்களுடன் தனிப்பட்ட முறையில் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளாத இளையராஜா, தான் இசையமைத்த 4500 பாடல்களுக்கு ஊதியம் பெற்றுக்கொண்ட பிறகு அதற்கு தார்மீக உரிமை கோர முடியாது.

பாடல்கள் மீது எந்த உரிமையும் இளையராஜா கோர முடியாது – நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் வாதம்
இளையராஜா
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 25 Sep 2024 15:29 PM

இசையமைப்பாளர் இளையராஜா பாடல்கள் மீது எந்த தார்மீக உரிமையும் கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் வாதம் வைத்துள்ளது. பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளர்களுடன் எந்தவித ஒப்பந்தமும் செய்து கொள்ளாத இளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது. சம்பளம் கொடுத்து இசை சேவையை பெறும் தயாரிப்பாளர்தான் முதல் காப்புரிமை உரிமையாளராகிறார் என எக்கோ நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதங்களை அடுக்கியுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள 4,500 பாடல்களை பயன்படுத்த தங்களுக்கு உரிமைஉள்ளது எனக்கூறி, எக்கோ இசை நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று இறுதி விசாரணைக்கு வந்தது.

இசையமைப்பாளர் இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஆனால் இந்த ஒப்பந்தம் கடந்த 2014 ஆம் ஆண்டுடன் முடிந்த நிலையில் காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்துவதாக இரு நிறுவனங்களின் மீதும் இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தனி நீதிபதி தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதாகவும் , இளையராஜாவுக்கும் இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருப்பதாகவும் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தது.

Also read… ‘தக் லைஃப்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து… பிரபல நடிகருக்கு காலில் எலும்புமுறிவு!

இதனிடையே, படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதாகவும், அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்களை பயன்படுத்த அதிகாரம் இருப்பதாகவும் எக்கோ நிறுவனம் சார்பிலும் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று இறுதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், பதிப்புரிமை தொடர்பாக தயாரிப்பாளர்களுடன் தனிப்பட்ட முறையில் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளாத இளையராஜா, தான் இசையமைத்த 4500 பாடல்களுக்கு ஊதியம் பெற்றுக்கொண்ட பிறகு அதற்கு தார்மீக உரிமை கோர முடியாது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பதிப்புரிமையை யாருக்கும் வழங்குவதில்லை. ஆனால், இளையராஜா படத் தயாரிப்பாளர்களுடன் பதிப்புரிமையை வழங்கிவிட்டார். உரிமையை தன் வசம் வைத்திருக்க வேண்டும் என்றால் அதற்கு ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். ஒப்பந்தம் போடாத நிலையில் பாடலுக்கு உரிமை கோர முடியாது என வாதிட்டுள்ளது எக்கோ நிறுவனம். இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்த உரிமை உள்ளது. இசையை திரித்தாலோ, பாடல் வரிகளை மாற்றினாலோ மட்டும் தான் தார்மீக உரிமை வரும்” எனக் கூறியுள்ளது. இளையராஜா தரப்பு வாதங்களுக்காக விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Latest News