5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

அமரன் படக்குழுவிற்கு சிக்கல்… ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மாணவர் நோட்டீஸ்

இப்படம் மூலம் தனக்கு 'மன வேதனை' ஏற்பட்டுள்ளதாக என்ஜினீயரிங் மாணவர் வாகீசன் என்பவர் 'அமரன்' படக்குழுவிற்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், படத்தில் வரும் ஒரு காட்சியில் சாய் பல்லவியின் செல்போன் எண் என்று ஒரு தொலைபேசி எண் காட்டப்பட்டிருக்கும். இந்த நிலையில் அந்த செல்போன் எண் தன்னுடையது என மாணவர் வாகீசன் தற்போது தெரிவித்துள்ளார்.

அமரன் படக்குழுவிற்கு சிக்கல்… ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மாணவர் நோட்டீஸ்
‘அமரன்’ படம்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Nov 2024 21:14 PM

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வசூலில் சக்கைப்போடு போட்டு வரும் அமரன் படத்தில் வரும் ஒரு காட்சியால் தான் மன வேதனை அடைந்ததாக கூறி என்ஜினீயரிங் மாணவர் ஒருவர் ரூபாய் 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து காமெடி கதைகளைக் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். வெள்ளித்திரைக்கு வருவதற்கு முன்னரே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சின்னத்திரையிலேயே பிடித்தவர் தான் சிவகார்த்திகேயன். சினிமாவில் நடிப்பதற்கு முன்பே இவர் தமிழ் ரசிகர்களிடையே பரிட்சையமான நபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு வெள்ளித்திரையில் நுழைந்த சிவகார்த்திகேயன் இப்போது கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக உள்ளார்.

சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆவதற்கு முன் சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றினார். இவர் தொகுத்து வழங்கிய அத்தனை நிகழ்சிகளுமே டிஆர்பியில் நல்ல இடத்தைப் பிடித்தது. நாயகனாக நடிக்கத் தொடங்கிய சிறிது காலத்திலேயே தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார் சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான மாவீரன் மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக அயலான் படம் வெளியீட்டில் தாமதம் ஆனாலும் குழந்தைகளை கவரும் வகையில் இருந்ததால் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

முன்னதாக ஒரு விருது வழங்கும் விழாவில் சிவகார்த்திகேயனைப் பார்த்து நடிகர் விஜய் ‘புடுச்சிட்டாரு… குட்டீஸ் எல்லாரையும் புடுச்சிட்டாரு’ என்ற கூறியது போல ஒருதரப்பட்ட ரசிகர்கள் மட்டும் இன்றி நடிகர் விஜய்க்கு இருப்பது போல குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களும் சிவகார்த்திகேயனுக்கு உண்டு. நடிப்பு மட்டும் இன்றி பாடல்கள் எழுவது, படங்களை தயாரிப்பது போன்ற பணிகளிலும் நடிகர் சிவகார்த்திகேயன் ஈடுபட்டு வருகிறார். இவர் நடித்து தயாரித்த ‘கனா’ படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 21-வது படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் கூட்டணி வைத்தார். இந்தப் படத்திற்கு ‘அமரன்’ என்று பெயர் வைத்தனர். சோனி பிக்சர்ஸுடன் இணைந்து இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது.

Also read… ‘ஆடு ஜீவிதம்’ படத்திற்காக ஏ.ஆர். ரகுமானுக்கு ஹாலிவுட் விருது அறிவிப்பு!

 மேஜர் முகுந்த் வரதராஜன் தனது 31-வது வயதில் இந்திய நாட்டை எதிரிகளிடம் இருந்து காப்பதற்காக தனது உயிர் தந்ததன் காரணமாக நாட்டின் மிக உயரிய விருதான அசோக் சக்ரா விருது அவருக்கு அறிவிக்கப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் அந்த விருதை மறைந்த முகுந்த்தின் மனைவி இந்து முகுந்த் பெற்றுக்கொண்டார்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. தமிழில் மீண்டும் ஒரு தேசபக்தி படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

Also read… திருமணத்தில் ஆர்வம் இல்லாமல் போனதற்கு இதுதான் காரணம் – நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

இதற்கிடையே இப்படம் மூலம் தனக்கு ‘மன வேதனை’ ஏற்பட்டுள்ளதாக என்ஜினீயரிங் மாணவர் வாகீசன் என்பவர் ‘அமரன்’ படக்குழுவிற்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், படத்தில் வரும் ஒரு காட்சியில் சாய் பல்லவியின் செல்போன் எண் என்று ஒரு தொலைபேசி எண் காட்டப்பட்டிருக்கும். இந்த நிலையில் அந்த செல்போன் எண் தன்னுடையது என மாணவர் வாகீசன் தற்போது தெரிவித்துள்ளார். படத்தை பார்த்த பலர் அந்த தொலைபேசி எண் நடிகை சாய் பல்லவியின் உண்மையான தொலைபேசி எண் என நினைத்து அந்த எண்ணுக்கு பலரும் போன் செய்து வாழ்த்து கூற முயன்றுள்ளனர்.

இதனால் அந்த மாணவர் மன வேதனை அடைந்துள்ளார். படம் வெளியான நாளில் இருந்தே தொடர்ந்து வரும் அழைப்புகளால் தன்னால் தூங்கவோ, படிக்கவோ, மற்ற வேலைகளை செய்யவோ முடியவே இல்லை என்று கூறியுள்ளார். அதனால் அமரன் படக்குழுவினரிடம் ரூ.1 கோடியே 10 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு மாணவர் வாகீசன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Latest News