Home Tour : எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவின் வீட்டை பார்த்துள்ளீர்களா? வீடியோ இதோ! – Tamil News (தமிழ் செய்தி): Breaking Tamil Samachar, and Latest Tamil News Live | TV9 Tamil

Home Tour : எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவின் வீட்டை பார்த்துள்ளீர்களா? வீடியோ இதோ!

Updated On: 

01 Jul 2024 16:42 PM

Ethirneechal Madhumitha: எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக கலக்கியவர் தான் மதுமிதா. இவர் கடந்த 2017-ம் ஆண்டு கன்னடத்தில் ஒளிபரப்பான ஷானி என்கிற சீரியல் மூலம் அறிமுகமானார். இதையடுத்து புட்டமல்லி, ஜெய் ஹனுமான் போன்ற தொடர்களில் நடித்தார் மதுமிதா.  மதுமிதாவுக்கு இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கில் பாலோவர்கள் உள்ளனர். அவர்களை கவரும் விதமாக அவ்வப்போது சுற்றுலா சென்றபோது எடுக்கும் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் மதுமிதா.

Home Tour : எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவின் வீட்டை பார்த்துள்ளீர்களா? வீடியோ இதோ!

நடிகை மதுமிதா

Follow Us On

சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மதுமிதா. தமிழகத்தின் முன்னணி சேனல்கள் அனைத்திலுமே தவறாமல் ஒளிபரப்பாகி வருகின்றன சீரியல்கள். சினிமா படங்களுக்கு ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருப்பதைப் போன்று டிவிகளில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதோடு சீரியல்களில் நடிக்கும் நடிகர்களை தங்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்கள் போல அன்பு செலுத்தி வருகிறார்கள் பார்வையாளர்கள். பிரபல சேனல்களில் மதிய நேரங்களில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் சீரியல்கள் இல்லத்தரசிகளையும், மாலை பிரைம் டைமிங்கில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் சீரியல்கள் இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் கவர்ந்து TRP ரேட்டிங் லிஸிட்டில் இடம்பிடித்து வருகின்றன.

பல தொலைக்காட்சிகள் பல விதமான தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. ஆனால் எப்போதும் போட்டி என்னவோ சன் டிவிக்கும், விஜய் டிவிக்கும் தான், இந்த இரண்டு சேனல்களின் தொடர்களுக்கு மவுசு அதிகம் என்றே கூறலாம். சன் டிவியில் நடிகை தேவையானி நடிப்பில் வெளியான கோலங்கள் என்ற சீரியல் பட்டித்தொட்டி எங்கும் மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த சீரியலில் தொல்காப்பியன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் திருச்செல்வம். இவர்தான் கோலங்கள் சீரியலின் இயக்குநரும் கூட. அந்த சீரியலின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் திருச்செல்வம் கடந்த 2022-ம் ஆண்டு எதிர்நீச்சல் என்ற சீரியலை இயக்கத் தொடங்கினார்.

ஆணாதிக்கம் மிக்க அண்ணன் – தம்பிகள் தங்கள் வீட்டு பெண்களை எவ்வாறு அடிமைப் படுத்துகிறார்கள் என்பதும், அதை அந்தப் பெண்கள் எதிர்கொண்டு எவ்வாறு மீண்டெழுகிறார்கள் என்பதே எதிர்நீச்சல் சீரியலின் கதைகளம். குணசேகரனால் அடிமைப்படுத்தப்பட்ட பெண்கள் இப்போது தைரியமாக தங்களது எதிர்காலத்தை நோக்கி பயணிக்க தொடங்கினர். 700க்கும் மேற்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பாகிய இந்த தொடர் கதை, வசனம், திரைக்கதை மூலம் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்டது.

Also read… Cinema Rewind: காலேஜ் டூரில் நடந்த கலவரம்… விஜய் சொன்ன விசயம் – வைரலாகும் பழைய வீடியோ

2022 பிப்ரவரி மாதம் முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் சத்யப்ரியா, வேல ராமமூர்த்தி, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி, கனிகா, மதுமிதா, கமலேஷ் உள்ளிட்ட பலர் நடித்தர். சமூக செயற்பாட்டாளராக ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தில் இயக்குநர் திருச்செல்வம் இந்த சீரியலிலும் நடித்தார். இந்த சீரியல் சமீபத்தில் முடிவுக்கு வந்தது.

எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக கலக்கியவர் தான் மதுமிதா. இவர் கடந்த 2017-ம் ஆண்டு கன்னடத்தில் ஒளிபரப்பான ஷானி என்கிற சீரியல் மூலம் அறிமுகமானார். இதையடுத்து புட்டமல்லி, ஜெய் ஹனுமான் போன்ற தொடர்களில் நடித்தார் மதுமிதா.  மதுமிதாவுக்கு இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கில் பாலோவர்கள் உள்ளனர். அவர்களை கவரும் விதமாக அவ்வப்போது சுற்றுலா சென்றபோது எடுக்கும் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் மதுமிதா. இந்நிலையில் அவர் தனது சென்னை வீட்டை வீடியோ எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் குவிந்து வருகிறது.

Exit mobile version