விறுவிறுப்பாக நடைபெறும் வேட்டையன் பட பணிகள்… டப்பிங் தொடங்கிய ஃபகத் பாசில்! - Tamil News | Fahadh Faasil begins dubbing for Vettaiyan | TV9 Tamil

விறுவிறுப்பாக நடைபெறும் வேட்டையன் பட பணிகள்… டப்பிங் தொடங்கிய ஃபகத் பாசில்!

Published: 

07 Jul 2024 13:10 PM

Vettaiyan: அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இந்தப் படத்தில் தனது போர்சனை ரஜினி நடித்து முடித்துள்ளதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டது. படம் தற்போது வெளியீட்டிற்காக தயாராகி வருகிறது. இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அடுத்து படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சி நடைபெற உள்ளன.

விறுவிறுப்பாக நடைபெறும் வேட்டையன் பட பணிகள்... டப்பிங் தொடங்கிய ஃபகத் பாசில்!

ஃபகத் பாசில்

Follow Us On

ரஜினியின் வேட்டையன் படத்தில் நடித்துள்ள நடிகர் ஃபகத் பாசில் தனது டப்பிங் பணியைத் தொடங்கியுள்ளார். ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். கூட்டத்தில் ஒருத்தன், ஜெய் பீம் ஆகிய படங்களை இயக்கிய ஞானவேல் இப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தென் மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு மும்பை ராஜஸ்தான் பகுதிகளில் நடைபெற்றதை தொடர்ந்து தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வரும் அக்டோபர் மாதம் வேட்டையன் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இந்தப் படத்தில் தனது போர்சனை ரஜினி நடித்து முடித்துள்ளதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டது. படம் தற்போது வெளியீட்டிற்காக தயாராகி வருகிறது. இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அடுத்து படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சி நடைபெற உள்ளன.

Also read… பாக்ஸ் ஆபிஸில் கொடிகட்டி பறக்கும் பிரபாஸின் கல்கி… 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில் அடுத்ததாக தனது 171-வது படத்தில் கமிட்டாகி விறுவிறுப்பாக படத்தின் வேலையில் இறங்கியுள்ளார் ரஜினிகாந்த். நடிகர் ரஜினி நடிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு ‘கூலி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் படப்பிடிப்பு கடந்த வாரத்தில் இருந்து தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் வேட்டையன் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் லைகா நிறுவனத்தின் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி வேட்டையன் படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பித்திருக்கின்றன. தனது போர்ஷனுக்கான டப்பிங்கை ஃபகத் பாசில் இன்று பேசுகிறார். அதுதொடர்பான புகைப்படங்கள் ட்ரெண்டாகியிருக்கின்றன. ரஜினிகாந்த்தும் விரைவில் வந்து தன்னுடைய பகுதிக்கான டப்பிங்கை பேசி முடிக்கவிருக்கிறார் என்று கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version