Yogi Babu: வெளியுலக நபர்களால் டார்ச்சர்.. நொந்துபோன யோகிபாபு – நடந்தது என்ன?
Tamil Cinema: வாழ்க்கையில் நாம் படும் அவமானங்கள் கற்றுதரும் பாடங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. வீட்டில் 3 வேளை சாப்பாட்டுக்காக வேலை இல்லாமல் இருக்கும்போது கிடைக்கும் பேச்சுகளை கேட்டிருப்போம்.இது எல்லாருடைய வீட்டிலும் நடப்பது தான். கோடீஸ்வரன் வீட்டில் உள்ள பசங்க கூட சினிமாவில் வாய்ப்பு தேடும்போது அவர்கள் குடும்பத்தில் இதனால் நடக்கும் பிரச்னைகளை சொல்வார்கள்.
நடிகர் யோகிபாபு: சினிமாவில் நிரந்தரமான ஒரு இடத்தைப் பிடிக்க ஒவ்வொருவரும் படும் கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு சில பேருக்கு ஒரு சில ஆண்டுகளில் எதிர்பார்த்த புகழ் கிடைக்கும். ஒரு சில பேர் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமாக தான் முன்னேறி வருவார்கள். அப்படியாக லொள்ளுசபா மூலம் சின்னத்திரையில் நுழைந்து, யோகி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்றைக்கு டாப் காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் யோகிபாபு. காமெடியனில் இருந்து ஹீரோவாக ப்ரோமோஷன் பெற்று, இன்றைக்கு பிஸியான நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். சமீபத்தில் கூட யோகிபாபு ஹீரோவாக நடித்த போட் படம் வெளியாகி நல்ல பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் இந்த உயரத்தை அடைய அவர் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அதனை யோகிபாபு பகிர்ந்திருந்தார்.
இதையும் படிங்க: Cinema Rewind: மலையாள சினிமா மக்களின் ரசனையை மாற்றியுள்ளது – ஏ.ஆர்.முருகதாஸ்
அதில், “வாழ்க்கையில் நாம் படும் அவமானங்கள் கற்றுதரும் பாடங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. வீட்டில் 3 வேளை சாப்பாட்டுக்காக வேலை இல்லாமல் இருக்கும்போது கிடைக்கும் பேச்சுகளை கேட்டிருப்போம்.இது எல்லாருடைய வீட்டிலும் நடப்பது தான். கோடீஸ்வரன் வீட்டில் உள்ள பசங்க கூட சினிமாவில் வாய்ப்பு தேடும்போது அவர்கள் குடும்பத்தில் இதனால் நடக்கும் பிரச்னைகளை சொல்வார்கள். ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி வெளியில் சொந்த பந்தங்கள், நட்பு வட்டாரங்கள் நமக்கு கொடுக்கும் டார்ச்சரை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. வேலை இல்லாமல், சினிமா வாய்ப்பு கிடைக்காமல், என்ன பண்ணுவது என தெரியாமல் சுத்தும்போது நண்பர்களிடம் சொல்லும்போது அவர்கள் பதில் பேசவும் மாட்டார்கள், அறிவுரை சொல்லவும் மாட்டார்கள். அவர்கள் காட்டும் ரியாக்ஷனே நாம் எந்தளவுக்கு இருக்கிறோம் என்பதை சொல்லும். அதில் சில விஷயங்கள் நம்மை வாழ்க்கையில் தூண்டும். என்றைக்கும் நான் சொல்வது ஒன்றே ஒன்று தான். நல்ல நம்பிக்கையுடன், உழைப்புடன் எந்த வேலையில் நாம் இறங்கினாலும் சக்ஸஸ் பண்ணிரலாம்.
Also Read: ABC Juice : ஏபிசி ஜூஸை இந்த மருத்துவ பிரச்னைகள் உள்ளவர்கள் குடிக்க கூடாது.. ஏன் தெரியுமா?
நான் கட்டடத்துக்கு செண்டரிங் போடுவது, ஒரு வருடமாக காவலாளியாக இரவுப்பணி பார்ப்பது, ஹூண்டாய் கம்பெனியில் வேலை, சிலிண்டர் கம்பெனியில் பணி, சினிமாவுக்குள் வந்த பிறகு லொள்ளுசபாவில் பணியாற்றிய கலை இயக்குநர் ஒருவருடன் செட் போடுவது போன்ற வேலையெல்லாம் பார்த்திருக்கிறேன். சில பேர் அவர்கள் பட்ட வலியினால் இதனை வெளியே சொல்லி விடுவார்கள். ஆனால் நான் தைரியமானவன் என்பதால் வெளியே சொல்ல மாட்டேன். நாம் சொல்லும் வார்த்தை ஒருவரை ஊக்கப்படுத்த வேண்டும். எதுவாக இருந்தாலும் தைரியமாக வா, இதில் போராட்டம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதைப் பார்க்காமல் ஜெயிக்கிற விஷயத்தை மட்டும் பார்க்க வேண்டும்.