புற்றுநோய் பாதிப்பு.. பிரபல சின்னத்திரை நடிகர் காலமானார்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
பிரபல சின்னத்திரை நடிகர் நேர்ரன் (47) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் 25 ஆண்டுகளாக பல சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த நேத்ரன், கடந்த 6 மாதங்களாக நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பிரபல சின்னத்திரை நடிகர் நேர்ரன் (47) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் 25 ஆண்டுகளாக பல சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த நேத்ரன், கடந்த 6 மாதங்களாக நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு அவர் காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சின்னத்திரையில் 20 ஆண்டுகளாக மேலாக நடித்து வந்தவர் நேத்ரன் (47). இவர் முதன்முதலாக மருதாணி சீரியல் மூலம் பிரபலமானவர். இதன்பிறகு பல சீரியல்களில் நடித்து சின்னத்திரை தனக்கென தனி இடத்தை பிடித்தார் நேத்ரன். முள்ளும் மலரும், சதிலீலாவதி, உறவுகள் சங்கமம், வள்ளி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.
பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் காலமானார்
இதோடு, பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டார். சனி டிவியில் மஸ்தானா மஸ்தானா நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னரானார். அதைத் தொடர்ந்து விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1,3,5 சீசன்களில் கலந்து கொண்டார். தொடர்ந்து சூப்பர் குடும்பம் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கிறார்.
இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தீபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நினைத்தாலே இனிக்கும் தொடரில் நடித்து வருகிறார். இந்த தம்பதிக்கு அபிநயா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் அபிநயா சீரியல்களில் நடித்து வருகிறார்.
அஞ்சனா, கணேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி வரும் ரேவன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். டாடா படத்தை இயக்கியவர் கணேஷ் பாபு. இந்த சூழலில், கடந்த சில மாதங்களுக்கு நேத்ரனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
Also Read : கமல்ஹாசனுடன் கைகோக்கும் ஜி.வி.பிரகாஷ்.. வெளியான அப்டேட்!
நுரையீரல் புற்றுநோய்
இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் புற்றுநோய் உடல் முழுவதும் பரவியதாக தெரிகிறது. இதனால் அவருககு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று அவர் சிசிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
View this post on Instagram
இவரது மறைவு சின்னத்திரை பிரபலங்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவரது மறைவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், நடிகர் நேத்ரன் இறப்பதற்கு 2 வாரங்களுக்கு முன்பு தனது மகள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
Also Read : கடல் பாறையில் அமர்ந்து யோகா செய்த போது விபத்து.. உயிரிழந்த இளம் நடிகை!
அதில், “எனது 2வது மகள் அஞ்சனா எனக்கு வீட்டிலேயே நாட்டு சர்க்கரை வைத்து பிஸ்கட் செய்து கொடுத்தார். அது மிகவும் சுவையாக இருந்தது” என்று குறிப்பிட்டிருந்தார். இது தான் இவர் பதிவிட்ட கடைசி பதிவாகும். இந்த பதிவில் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.