5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பிரபல வில்லன் நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமானார்

தமிழ் திரையுலகின் 80, 90 காலகட்டத்தில் பிரபல வில்லன் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மோகன் வி நடராஜன். நல்ல வில்லன் நடிகராக அறியப்பட்ட இவர் சரத்குமாரின் நம்ம அண்ணாச்சி, விஜயகாந்தின் சக்கரைத் தேவன், கமல்ஹாசனின் மகாநதி, அஜித்தின் சிட்டிசன் படங்களில் வில்லனாக நடித்துள்ளார். மேலும், கோட்டை வாசல், புதல்வன், பிள்ளைக்காக, பாட்டுப்பாடவா, அரண்மனை காவலன், பதவிப்பிரமாணம், பட்டியல் என பல படங்களில் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார்.

பிரபல வில்லன் நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமானார்
மோகன் நடராஜன்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 04 Sep 2024 11:13 AM

பிரபல வில்லன் நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான மோகன் நடராஜன் காலமானார். அவருக்கு வயது 71.  1980 முதல் 90 காலகட்டத்தில் வெளியான ஏராளமான படங்களில் வில்லனாக நடித்து அசத்தியவர். தமிழ் திரையுலகில் ஸ்ரீ ராஜகாளியம்மன் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல்வேறு படங்களை தயாரித்தவர் மோகன் நடராஜன். தயாரிப்பாளராக மட்டுமன்றி ‘மகாநதி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் வில்லனாகவும் நடித்திருந்தார். கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவு காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்த நிலையில் சிகிக்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்ட தமிழ் திரையுலக பிரபலங்கள் அவருடைய மறைவுக்கு  பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்களும் அவருக்கு தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மோகன் நடராஜன் தனது ராஜகாளியம்மன் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் கடந்த 1986ல் மோகன் நதியா நடிப்பில் வெளிவந்த பூக்களைப் பறிக்காதீர்கள் எனும் திரைப்படம் மூலம், மோகன் நடராஜன் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பூ மழை பொழியுது, இனிய உறவு பூத்தது, என் தங்கச்சி படிச்சவ, பிள்ளைக்காக, எங்க அண்ணன் வரட்டும், வேலை கிடைச்சிருச்சு, கிழக்குக்கரை, கோட்டைவாசல், சாமுண்டி, மறவன், பதவி பிரமாணம், கண்ணுக்குள் நிலவு, ஆழ்வார், வேல் மற்றும் தெய்வத்திருமகள் ஆகிய தமிழ் படங்களை தயாரித்துள்ளார்.

Also read… வாடக பிரச்னை இல்லாம கஞ்சி குடிக்கனும்… ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ பட ட்ரெய்லர் இதோ!

தமிழ் திரையுலகின் 80, 90 காலகட்டத்தில் பிரபல வில்லன் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மோகன் வி நடராஜன். நல்ல வில்லன் நடிகராக அறியப்பட்ட இவர் சரத்குமாரின் நம்ம அண்ணாச்சி, விஜயகாந்தின் சக்கரைத் தேவன், கமல்ஹாசனின் மகாநதி, அஜித்தின் சிட்டிசன் படங்களில் வில்லனாக நடித்துள்ளார். மேலும், கோட்டை வாசல், புதல்வன், பிள்ளைக்காக, பாட்டுப்பாடவா, அரண்மனை காவலன், பதவிப்பிரமாணம், பட்டியல் என பல படங்களில் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார்.

விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிகரமாக படங்களை தயாரித்து வெளியிட்டவர் மோகன் நடராஜன் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Latest News