5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

OTT Movies: கொட்டுக்காளி முதல் டிமாண்டி காலனி 2 வரை… இந்த வாரம் ஓடிடியில் என்ன பார்க்கலாம்

What to Watch: தியேட்டரில் படம் பார்க்காமல் தவறவிடுபவர்கள் பலரும் நம்பி இருப்பது ஓடிடி தான். தியேட்டர் ரிலீஸ் போலவே ஓடிடியிலும் வாரவாரம் புது படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அந்த வரிசையில் இந்த வாரம் கொட்டுக்காளி, மின்மினி, சாட்டர்டே உள்ளிட்ட படங்கள் ரிலிஸ் ஆகவுள்ளன.

OTT Movies: கொட்டுக்காளி முதல் டிமாண்டி காலனி 2 வரை… இந்த வாரம் ஓடிடியில் என்ன பார்க்கலாம்
ஓடிடியில் என்ன பார்க்கலாம்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 19 Nov 2024 15:51 PM

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி, அன்னா பென் ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் ‘கொட்டுக்காளி’. இப்படத்தை ‘கூழாங்கல்’ பட இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் இயக்கியிருந்தார். ஃபெஸ்டிவல் மூவி என்பதால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்றது. திரைப் பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தை பாராட்டினர். இருப்பினும் ஜெர்மனி, கனடா, போர்ச்சுக்கல், ஆர்மீனியா, ரஷ்யா உள்ளிட்ட திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்று சாதனை படைத்தது. இந்த நிலையில் படம் நாளை அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

‘சில்லு கருப்பட்டி’, ‘ஏலே’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். இவரது இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ‘மின்மினி’. திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது குழந்தைகளாக இருந்து இளம் பருவத்தினராக மாறும் கதாபாத்திரங்களைக் கொண்ட கதை என்பதால், 2015-ம் ஆண்டு குழந்தைப் பருவத்தில் இருந்த கதாபாத்திரங்களை படமாக்கிவிட்டார். ‘மின்மினி’ படத்தில் எஸ்தர் அனில், பிரவின் கிஷோர் மற்றும் கௌரவ் காளை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்த நிலையில் படம் நாளை டெண்ட்கொட்டா ஓடிடியில் வெளியாகவுள்ளது.

நேச்சுரல் ஸ்டார் நானி, நாயகனாக நடித்துள்ள படம், ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’. விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ள இதில் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன், அபிராமி, அதிதி பாலன் உட்பட பலர் நடித்துள்ளனர். டிவிவி என்டர்டெய்ன்மென்ட் சார்பில் டிவிவி தனய்யா, கல்யாண் தாசரி தயாரித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் ஆகஸ்ட் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தெலுங்கில் முதன்மையாக உருவாகியிருந்தலும் படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தில் பல தமிழ் நடிகர்கள் இருந்ததால் குறிப்பாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தால் படம் பார்த்த தமிழ் ரசிகர்களுக்கு அது தமிழ் படம் போலவே தோன்றியதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில் இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் டிமான்டி காலனி. இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. 9 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் முன்னணி கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப்ப் கடந்த மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் நாளை இந்தப் படம் ஜீ-5 ஓடிடியில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் வந்தனா இயக்கத்தில் நடிகை ஷோபிதா துலிபாலா நடித்துள்ள படம் லவ் சிதாரா (Love Sitara). திருமணம், காதல் மீது நம்பிக்கையற்ற சித்தாரா, அர்ஜூனை சந்தித்த பின் காதல் கொள்கிறாள். அதன் பின் நடக்கும் சிக்கல்களே படம். இந்தப் படம் நாளை ஜீ – 5 ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது.

மனித எமோஷன்ஸ் மற்றும் சயின்ஸ் ரெண்டையும் கலந்து பார்வையாளர்களை கட்டிப்போடும் ஒரு படமாக பிளின்க் அமைந்துள்ளது. கன்னட படமான இது தற்போது தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படம் செப்டம்பர் 25-ந் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது.

Latest News