OTT Movies: ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்… இந்த வாரம் என்ன பார்க்கலாம்? - Tamil News | films are going to release in ott this septembet 1st week | TV9 Tamil

OTT Movies: ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்… இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

Published: 

07 Sep 2024 17:24 PM

Watch to Watch: தியேட்டரில் வெளியாகும் புதுப் படங்கள் வெளியாகி 4 முதல் 6 வாரங்களிலேயே தற்போது ஓடிடி தளங்களில் வெளியாகிவிடுகிறது. இதனால் ரசிகர்கள் தாங்கள் தியேட்டரில் பார்க்கத் தவறிய படங்களை வீட்டில் இருந்தே பார்த்து மகிழ்கின்றனர். கோலிவுட் முதல் பாலிவுட் வரை இந்த வாரம் படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றது.

OTT Movies: ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்... இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

படங்கள்

Follow Us On

நடிகர் நகுல் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாஸ்கோடகாமா படம் தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றது. இந்த படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கடந்த 2021ம் ஆண்டு பிரபல நடிகர் பகத் பாசில் நடிப்பில் வெளியான இருள் என்ற மலையாள திரைப்படம் தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றது.

இயக்குநர் நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் வெளியான படம் கில். இந்தப் படம் தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

நடிகர்கள் பிஜு மேனன் மற்றும் ஆசிப் அலி நடிப்பில் உருவான திரைப்படம் தான் தலவன். இந்தப் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அடியோஸ் அமிகோ திரைப்படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது. ஆசிப் அலி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு நடித்துள்ள இந்த ரோட் மூவி ஒரு பீல் குட் நகைச்சுவை திரைப்படமாக அமைந்துள்ளது.

நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான வினீத் குமார், திலீப் முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் பவி கேர் டேக்கர். இந்தப் படம் தற்போது மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றது.

முரளி மனோகர் ரெட்டி இயக்கத்தில் ஜகபதி பாபு, அனசூயா பரத்வாஜ், வசிஷ்ட என் சிம்ஹா மற்றும் அனிஷ் குருவில்லா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள சிம்பா படம் தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றது.

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version