‘பளடி பெக்கர்’ படத்தின் 2-வது ஸ்னீக் பீக் வீடியோ இதோ!
Bloody Beggar - Beggar Peek 2 | சினிமாவில் காலடிவைத்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து மிக குறுகிய காலத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் கவின். தற்போது இவர் ‘ப்ளடி பெக்கர்’ படத்தில் நடித்துள்ளார். படத்தை இயக்குநர் சிவபாலன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கவினுடன் இணைந்து, ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகதா, டி.எம்.கார்த்திக், பதம் வேணு குமார், அர்ஷத், பிரியதர்ஷினி ராஜ்குமார், மிஸ் சலீமா, அக்ஷயா ஹரிஹரன், அனார்கலி நாசர், திவ்யா விக்ரம் என பலர் நடித்துள்ளனர்.
நடிகர் கவினின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ப்ளடி பெக்கர்’ படத்திலிருந்து 2-வது ஸ்னீக் பீக் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. சீரியல்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகர் கவின். லிப்ட் திரைப்படத்தை தொடர்ந்து டாடா திரைப்படத்தில் கவின் நடித்திருந்தார். இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் அடுத்ததாக இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடித்த ஸ்டார் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. சினிமாவில் காலடிவைத்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து மிக குறுகிய காலத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் கவின். தற்போது இவர் ‘ப்ளடி பெக்கர்’ படத்தில் நடித்துள்ளார். படத்தை இயக்குநர் சிவபாலன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கவினுடன் இணைந்து, ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகதா, டி.எம்.கார்த்திக், பதம் வேணு குமார், அர்ஷத், பிரியதர்ஷினி ராஜ்குமார், மிஸ் சலீமா, அக்ஷயா ஹரிஹரன், அனார்கலி நாசர், திவ்யா விக்ரம் என பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் அக்டோபர் 31-ம் தேதி இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ள நிலையில் படத்திலிருந்து 2-வது ஸ்னீக் பீக் வீடியோ வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.