தனுஷ் ரசிகர்களுக்கு குட்நியூஸ் சொன்ன ஜி.வி. பிரகாஷ்.. சூப்பர் அப்டேட்!
G.V. Prakash Kumar : தமிழ்த் திரைப்படங்களில் முன்னணி நாயகனாகப் பல திரைப்படங்களில் நடித்து வருபவர் தனுஷ். தற்போது திரைப்படங்களில் நடிப்பதைத் தாண்டி படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதைத் தொடர்ந்து தற்போது இவர் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் சிறப்பான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகராகப் பிரபலமாகி பின், திரைப்பட இயக்குநராகவும் பணியாற்றி வருபவர்களின் பட்டியலில் நடிகர் தனுஷும் ஒருவர். 2017ம் ஆண்டில் வெளியான “பவர் பாண்டி” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதைத் தாண்டி படங்களை இயக்கவும் ஆரம்பித்தார். தொடர்ந்து இவரின் இயக்கத்தில் இந்த ஆண்டு ராயன் திரைப்படம் வெளியாகி பெரும் சாதனையைப் படைத்தது. இந்நிலையில் இதை அடுத்தாக தற்போது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணியில் இருந்து வருகிறது. இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
இவரின் இசையில் “கோல்டன் ஸ்பாரோ மற்றும் காதல் பெயில்” போன்ற பாடல்கள் மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இந்நிலையில் தற்போது மூன்றாவது பாடலின் அப்டேட்டை ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க:அஜித் படத்துக்கு அடுத்து ‘மார்க் ஆண்டனி 2’ படமா? ஆதிக் ரவிச்சந்திரன் பிளான் இதுதான்!
நடிகர் தனுஷின் இயக்கத்தில் இறுதியாக வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக ராயன் அமைந்தது. இப்படத்தைத் தொடர்ந்தே “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” என்ற படத்தினை இயக்க உள்ளதாக தனுஷ் அறிவித்திருந்தார்.
2k கிட்ஸின் காதலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் இதில் பவிஷ், அனிகா சுரேந்திரன் , பிரியா பிரகாஷ் வாரியர் , மேத்யூ தாமஸ் , வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க:2024-ல் கேரள பாக்ஸ் ஆபீஸை தெரிக்கவிட்ட டாப் 5 தமிழ் படங்கள்!
இப்படத்திலிருந்து ஜி.வி பிரகாஷின் இசையமைப்பில் வெளியான “கோல்டன் ஸ்பாரோ” என்ற பாடலுக்கு நடிகை பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் நடித்திருப்பார். இந்த பாடலானது இதுவரை யூடியூபில் 106 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டி ட்ரெண்டிங்கில் உள்ளது.
The next single from #NEEK is my most favourite
In the album 😍😍😍 …. Let’s gooo @dhanushkraja @theSreyas …. Very very soon— G.V.Prakash Kumar (@gvprakash) December 16, 2024
இப்படத்தைத் தொடர்ந்து காதல் பெயில் என்ற பாடலும் வெளியாகியது. இப்பாடலும் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் மூன்றாவது பாடலுக்கான அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ” அடுத்த சிங்கிள் பாடலானது எனக்கு மிகவும் பிடித்து என்றும் நடிகர் தனுஷை அந்த பதிவில் டாக் செய்துள்ளார்.
இப்பாடலானது விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார். இந்த நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற திரைப்படம் வரும் 2025ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. இதை அடுத்தாக நடிகர் தனுஷ் “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி அதில் நடித்தும் வருகிறார்.
இதையும் படிங்க:இணையத்தில் கவனம் பெறும் SK25 படத்தின் பூஜை வீடியோ!