ஓடிடியில் வெளியாகும் ’கருடன்’… எப்போது தெரியுமா? - Tamil News | Garudan movie to be released on Amazon Ott platform on july 3rd | TV9 Tamil

ஓடிடியில் வெளியாகும் ’கருடன்’… எப்போது தெரியுமா?

Garudan OTT Update: படத்தில் சூரி தவிர்த்து, சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்தப் படம் கடந்த மே மாதம் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கருடன் திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தமிழக பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் ஒரு இக்கட்டான சூழலில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சுமார் 50 கோடி ரூபாய்க்கும் மேல் கருடன் திரைப்படம் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓடிடியில் வெளியாகும் ’கருடன்’... எப்போது தெரியுமா?

கருடன்

Published: 

01 Jul 2024 11:10 AM

சூரியின் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான சூரி, தொடர்ந்து பல படங்களில் மறக்க முடியாத நகைச்சுவை காட்சிகளை கொடுத்துள்ளார். வெண்ணிலா கபடி குழு படத்தில் இவர் இடம் பெற்ற பரோட்டா சாப்பிடும் காட்சி, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அவர் சூர்யா, அஜித், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் கூட்டணி வைத்து காமெடியில் கலக்கினார். சூரி – சிவகார்த்திகேயன் காம்போ உள்ள படங்கள் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து படத்திற்கு போகும் வகையில் இருந்தது. படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் சூரியின் காமெடி காட்சிகள் நிச்சயமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும்.

காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டிருந்த நடிகர் சூரி, இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை படத்திற்கு பின் கதாநாயகனாக மாறியிருக்கிறார். இப்படம் அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்ததால் அடுத்தடுத்து நல்ல ஹீரோயிசம் உள்ள கதைகளில் தற்போது நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள படம் ‘கருடன்’. ‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி கதையின் நாயகனாக இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

படத்தில் சூரி தவிர்த்து, சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்தப் படம் கடந்த மே மாதம் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கருடன் திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தமிழக பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் ஒரு இக்கட்டான சூழலில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சுமார் 50 கோடி ரூபாய்க்கும் மேல் கருடன் திரைப்படம் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also read… ”கெத்தா நடந்து வரான்”… வைரலாகும் ’விடாமுயற்சி’ ஃபர்ஸ்ட் லுக்!

இந்நிலையில், கருடன் படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் ப்ரைம் சில நாட்களுக்கு முன் கைப்பற்றியது. ஆனால் ஓடிடியில் படம் எப்போது வெளியாகவுள்ளது என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகாமலேயே இருந்தது. தற்போது அமேசான் ப்ரைமில் எப்போது வெளியாகவுள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கருடன் திரைப்படம் ஜூலை 3 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!