5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கோட் படத்தின் இரண்டாவது பாடலுக்கு காப்பி ரைட்ஸ்… அதிரடி காட்டும் படக்குழு – என்ன நடந்தது?

GOAT Movie 2nd Single: விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 22-ம் தேதி ’கோட்’ படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் வீடியோ மற்றும் கிளிம்ஸ் வீடியோ என அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களை ரசிகர்களுக்கு கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்தது படக்குழு. ’சின்ன சின்ன கண்கள்’ எனத் தொடங்கும் இந்தப் பாடல் நடிகர் விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரணி குரலில் வெளியானது. பாடகி பவதாரணி சமீபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது குரல் ஏஐ மூலம் இந்த பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கோட் படத்தின் இரண்டாவது பாடலுக்கு காப்பி ரைட்ஸ்… அதிரடி காட்டும் படக்குழு – என்ன நடந்தது?
‘கோட்’ படம்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 25 Jun 2024 12:38 PM

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் இருந்து கடந்த 22-ம் தேதி வெளியான இரண்டாவது பாடல் காப்பி ரைட்ஸ் பிரச்னையில் சிக்கியுள்ளது.  லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இந்தப் படத்தில் விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்‌ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தைத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடைசியாக விஜய்யின் புதிய கீதை படத்துக்கு இசையமைத்த யுவன், அதன் பின்னர் சுமார் 21 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய்யுடன் இணைந்திருக்கிறார்.

விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 22-ம் தேதி ’கோட்’ படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் வீடியோ மற்றும் கிளிம்ஸ் வீடியோ என அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களை ரசிகர்களுக்கு கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்தது படக்குழு. ’சின்ன சின்ன கண்கள்’ எனத் தொடங்கும் இந்தப் பாடல் நடிகர் விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரணி குரலில் வெளியானது. பாடகி பவதாரணி சமீபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது குரல் ஏஐ மூலம் இந்த பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. விஜய் மற்றும் சினேகாவின் காம்போவில் உருவாகி இருக்கும் இந்த மொலோடி பாடலை கபிலன் வைரமுத்து எழுதி இருக்கிறார்.

Also read… 10 – நாட்களில் இத்தனை கோடிகளா? மகாராஜா கலெக்‌ஷனை வெளியிட்ட படக்குழு

இந்நிலையில் சின்ன சின்ன கண்கள் பாடலை படக்குழு வெளியிடுவதற்கு முன்பே இணையத்தில் வெளியானது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அது குறித்தான எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த படக்குழு, தற்போது அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது, கோட் படத்தின் சின்ன சின்ன கண்கள் பாடல் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட சோசியல் மீடியாவில் உள்ள அனைத்து கணக்குகளுக்கு காப்பி ரைட்ஸ் நோட்டீஸை அனுப்பி உள்ளது. இப்படி மாற்ற சோஷியல் மீடியாவில் பாடல் பரவினால் அது அதிகாரப்பூர்வமாக பாடலின் ரீச்சை குறைத்துவிடும் என்பதால், படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

Latest News