Guruvayoor Ambalanadayil : மஞ்சுமல் பாய்ஸ் பட ரூட்.. ரம்பா பாட்டை கையிலெடுத்த மலையாளப் படம்.! - Tamil News | | TV9 Tamil

Guruvayoor Ambalanadayil : மஞ்சுமல் பாய்ஸ் பட ரூட்.. ரம்பா பாட்டை கையிலெடுத்த மலையாளப் படம்.!

கடந்த 2023ஆம் ஆண்டு இயக்குநர் விபின் தாஸ் இயக்கத்தில் வெளியான மலையாள படம் 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’. இப்படம் மலையான ரசிகர்கள் மட்டுமின்றி பலரது கவனத்தையும் ஈர்த்தது. விபின் தாஸ் அடுத்ததாக இயக்கிய படம் ’குருவாயூர் அம்பலநடையில்'. இந்த படத்தில் பசில் ஜோசப், பிருத்விராஜ், யோகிபாபு, நிகிலா விமர், அனஸ்வர ராஜன், ரேகா, இர்ஷாத் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த மே 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Guruvayoor Ambalanadayil : மஞ்சுமல் பாய்ஸ் பட ரூட்.. ரம்பா பாட்டை கையிலெடுத்த மலையாளப் படம்.!

குருவாயூர் அம்பலநடையில்

Updated On: 

29 Jun 2024 19:05 PM

ரம்பா பாட்டை கையிலெடுத்த மலையாளப் படம்: கடந்த 2023ஆம் ஆண்டு இயக்குநர் விபின் தாஸ் இயக்கத்தில் வெளியான மலையாள படம் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’. இப்படம் மலையான ரசிகர்கள் மட்டுமின்றி பலரது கவனத்தையும் ஈர்த்தது. விபின் தாஸ் அடுத்ததாக இயக்கிய படம் ’குருவாயூர் அம்பலநடையில்’. இந்த படத்தில் பசில் ஜோசப், பிருத்விராஜ், யோகிபாபு, நிகிலா விமர், அனஸ்வர ராஜன், ரேகா, இர்ஷாத் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த மே 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் ரூ.90 கோடி வசூலை இப்படம் குவித்தது. இதனை அடுத்து, கடந்த ஜூன் 27ஆம் தேதி ஓடிடி வெளியாகி மலையான ரசிர்களை தாண்டி தமிழ் ரசிர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தொடக்கம் முதல் இறுதிவரை காமெடி காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, இதில் ரம்பாவின் பாடல் இடம்பெற்றிருப்பது இந்த படம் ஹிட் ஆக முக்கிய காரணமாக உள்ளது.

அதாவது, ரம்பாவின் ’உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் இடம்பெற்ற பாடலான, ’அழகிய லைலா’ பாடல் வரும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஹிட் பாடலை படத்தில் இடம்பெற, மலையாளத்தில் வெற்றி நடை போடுகிறது குருவாயூர் அம்பலநடையில் படம். முன்னதாக வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படத்திலும் தமிழ் பாடல் இடம்பெற்றிருந்தது ரசிகர்கள் கொண்டாட செய்தது.

Also Read: கார்த்திகை தீபம் சீரியலில் தீபா உயிருக்கு வர போகும் ஆபத்து என்ன?

மஞ்சுமல் பாய்ஸ் பட ரூட்:

அதாவது, மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படம் சக்கைப்போடு போட்டது. மலையான சினிமா இல்லாமல் தமிழ் சினிமா வட்டாரத்திலும் இந்த படம் வெற்றி நடை போட்டது. குறிப்பாக, இந்த படத்தின் நிகழ்விடமாக உள்ள குணா படத்தில் வரும் குகைதான் உள்ளது. அதிலும், க்ளைமக்ஸில் வரும் கண்மணி அன்போடு காதலன் பாடல் ரசிர்களை கொண்டாட அழைத்தது. அந்த அளவிற்கு படத்திற்கு கதையோடு குணா குகையுடனும் ரசிர்கள் ஐக்கியமாகினர் எனலாம்.  இந்த படம் உலகளவில் ரூ.250 கோடி வசூலித்தது.

இதுமட்டுமின்றி, இந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே மலையாள படங்கள் வெற்றி அடைந்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் மலையாள படங்களுக்கு வரவேற்பு அதிகம் என்றே சொல்லாம். அதாவது, மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை தொடர்ந்து, கிரீஷ் ஏடி இயக்கிய பிரேமலு படத்தில் நஸ்லென், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் உலகம் முழுவதும் ரூ.136 கோடிக்கு மேல் வசூல் செய்தது.  இந்த நிலையில், தற்போது ஓடிடியில் வெளியான ’குருவாயூர் அம்பலநடையில்’ ரசிர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Also Read: அரசியல்.. போதைப்பொருள்.. மாணவர்கள் சந்திப்பில் விஜய் பேசிய முழு விவரம்!

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!