GV Prakash : ‘தமிழர் மாண்பு குறைந்து விட்டதா…?’ – ஜிவி பிரகாஷ் அடுக்கடுக்கான கேள்வி!
GV Prakash - Saindhavi Divorce : விவாகரத்து தொடர்பாக ஜிவி பிரகாஷ் மீண்டும் ஒரு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுது துரதிஷ்டவசமானது என ஜிவி பிரகாஷ் அறிக்கை விடுத்துள்ளார்
ஜி.வி. பிரகாஷ் : இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், இருவரும் விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் வலம் வந்தன. அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் தனித்தனியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், “நீண்ட யோசனைக்குப் பிறகு, சைந்தவியும் நானும் திருமணமாகி 11 வருடங்கள் கழித்து, ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையைக் காத்துக்கொண்டு, எங்கள் மன அமைதிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் பிரிந்து செல்ல முடிவு செய்தோம்.இந்த தனிப்பட்ட எங்களது கருத்துக்கு ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் எங்கள் தனியுரிமையைப் புரிந்துகொண்டு மதிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் பிரிந்து வருகிறோம் என்பதை ஒப்புக்கொண்டு, இது ஒருவருக்கு ஒருவர் சிறந்த முடிவு என்று நாங்கள் நம்புகிறோம். இந்த கடினமான நேரத்தில் உங்கள் புரிதலும் ஆதரவும் தேவை” என்று குறிப்பிட்டிருந்தார்
இந்நிலையில் இன்று விவாகரத்து அறிவிப்பு தொடர்பாக மீண்டும் ஒரு அறிக்கையொன்றை ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதில், ”புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுது துரதிஷ்டவசமானது. பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல. தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது யாரோ ஒரு தனிநபரின்” வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா…?
Also Read : 5 ஆண்டுகளுக்குப் பிறகு பிடித்த இடம்.. நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடியின் நெகிழ்ச்சி!
இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கிய பழகிய நண்பர்கள் உறவினர்கள் நன்கறிவார்கள். அனைவரிடமும் கலந்தாலோசித்து பின்புதான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம் எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன்.
— G.V.Prakash Kumar (@gvprakash) May 15, 2024
ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள் தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்