HBD Gautham Karthik: தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் கௌதம் கார்த்திக் பிறந்தநாள்..! - Tamil News | | TV9 Tamil

HBD Gautham Karthik: தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் கௌதம் கார்த்திக் பிறந்தநாள்..!

Published: 

12 Sep 2024 07:04 AM

நடிகர் கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகையாவார். இவர் கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்துள்ளார். தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வரும் அவர், நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். அவர் இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

1 / 6நடிகர்

நடிகர் கௌதம் கார்த்திக் திரையுலகின் மூன்றாம் தலைமுறை நடிகராவார். அவரின் தாத்தா மறைந்த பழம்பெரும் நடிகர் முத்துராமன், அப்பா நவரச நாயகன் கார்த்திக் ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி பிறந்தார்.

2 / 6

இவரை 2003 ஆம் ஆண்டு கார்த்திக் தான் இயக்கிய படம் மூலம் நடிகராக்க தீர்மானித்தார். ஆனால் அப்படம் கைவிடப்பட்டது. தொடர்ந்து மணிரத்னத்திடம் மகனை அறிமுகம் செய்தார்.

3 / 6

2012 ஆம் ஆண்டு மணிரத்னம் தான் இயக்கிய கடல் படம் மூலம் கௌதம் கார்த்திக்கை ஹீரோவாக அறிமுகம் செய்தார். இதே படத்தில் தான் நடிகர் ராதாவின் மகள் துளசியும் ஹீரோயினானார். முன்னதாக கார்த்திக், ராதா இருவரும் தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் சினிமாவில் அறிமுகமாகியிருந்தனர்.

4 / 6

பின்னர் வை ராஜா வை, என்னமோ ஏதோ, ரங்கூன், இவன் தந்திரன், இந்திரஜித், பத்து தல, ஆகஸ்ட் 16, 1947 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

5 / 6

தனது தந்தை கார்த்திக்குடன் இணைந்து சந்திரமௌலி படத்தில் இணைந்து நடித்தார். இவர்களின் காம்போ ரசிகர்களிடம் ஒர்க் அவுட் ஆனது,

6 / 6

நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து திருமணம் செய்த கௌதம் கார்த்திக் இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

Follow Us On
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
கல்லீரலை சுத்தப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
Exit mobile version