Happy Birthday Vadivelu: காமெடி உலகின் மாமன்னன்.. நடிகர் வடிவேலு பிறந்தநாள் இன்று! - Tamil News | Happy Birthday Vadivelu; Kollywood Celebs and Fans send wishes to famous comedian on his birthday; Read in Tamil | TV9 Tamil

Happy Birthday Vadivelu: காமெடி உலகின் மாமன்னன்.. நடிகர் வடிவேலு பிறந்தநாள் இன்று!

Published: 

12 Sep 2024 06:10 AM

வடிவேலு சினிமாவில் நடித்தாலும் சரி, வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருந்தாலும் சரி, அவரின் காமெடி காட்சிகள் இல்லாமல் ஒருநாளை கூட நம்மால் எளிதாக கடக்க முடியாது. மனம் விட்டு சிரித்தால் கவலைகள் எல்லாம் காணாமல் போய் விடும். அப்படிப்பட்ட சிகிச்சைக்கு சொந்தக்காரர்களாக காமெடி நடிகர்கள் உள்ளனர். அதில் வடிவேலு மிகவும் முக்கியமானவர். இவர் நடிக்க வந்தது ஒரு தனிக்கதை என்றால், காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் மிகவும் திறமையாக நடிப்பை வெளிப்படுத்துவார்.

Happy Birthday Vadivelu: காமெடி உலகின் மாமன்னன்.. நடிகர் வடிவேலு பிறந்தநாள் இன்று!

கோப்பு புகைப்படம்

Follow Us On

நடிகர் வடிவேலு: தமிழ் சினிமாவின் உச்ச காமெடி நடிகர், அனைவராலும் வைகைப்புயல் என அழைக்கப்படும் நடிகர் வடிவேலு இன்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இவர் சினிமாவில் நடித்தாலும் சரி, வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருந்தாலும் சரி, வடிவேலு காமெடி காட்சிகள் இல்லாமல் ஒருநாளை கூட நம்மால் எளிதாக கடக்க முடியாது. மனம் விட்டு சிரித்தால் கவலைகள் எல்லாம் காணாமல் போய் விடும். அப்படிப்பட்ட சிகிச்சைக்கு சொந்தக்காரர்களாக காமெடி நடிகர்கள் உள்ளனர். அதில் வடிவேலு மிகவும் முக்கியமானவர். இவர் நடிக்க வந்தது ஒரு தனிக்கதை என்றால், காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் மிகவும் திறமையாக நடிப்பை வெளிப்படுத்துவார். காமெடி நடிகராக இருந்த அவர் ஒரு கட்டத்தில் ஹீரோவாக அடுத்த அடியெடுத்து வைத்தார். மேலும் பாடகராகவும் வடிவேலு தமிழ் சினிமாவில் நன்கு பரீட்சையமானார். அப்படிப்பட்ட வடிவேலு பற்றி சின்ன ரீவைண்ட் பார்க்கலாம்.

Also Read: Tata Motors Discounts: கார்களுக்கு ரூ.2.05 லட்சம் வரை தள்ளுபடி.. டாடா கொடுக்கும் அடடே ஆஃபர்!

வடிவேலு நடிக்க வந்த கதை 

நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் ராஜ்கிரண் தான் வடிவேலுவை தன்னுடைய என் ராசாவின் மனசிலே படம் மூலம் சினிமாவுக்கு அழைத்து வந்தவர். அதாவது ராஜ்கிரண் தயாரிப்பாளராக இருக்கும்போது  அவருக்கு ரசிகர் மன்றம் இருந்துள்ளது. அதில் ஒரு ரசிகருக்கு கல்யாணம் என்றதும் அந்த நபர் ராஜ்கிரண் வந்து தாலி எடுத்து கொடுத்தால் தான் மணம் முடிப்பேன் என உறுதியாக இருந்துள்ளார். அந்த ரசிகரின் கல்யாணத்துக்காக ரயில் மூலமாக மதுரை சென்றுள்ளார்.  காலையில் அந்த ரசிகருக்கு கல்யாணம் முடிந்துவிட்டது. ராஜ்கிரண் ஊர் திரும்ப வேண்டுமென்றால் இரவுதான் ரயில் இருந்தது.

அதனால் அன்று ஒரு நாள் முழுவதும் நான் சும்மா இருக்க வேண்டுமே என என்ன செய்வதென்று யோசித்துள்ளார். அப்போது அந்த திருமணமான நபர் சார் என் நண்பர் ஒருத்தன் இருக்கிறான்.  உங்களுக்கு பேச்சுத்துணைக்கு அனுப்பி வைக்கிறேன். உங்களுடன் பேசிக்கொண்டிருப்பான். கண்டிப்பாக பொழுது போய் விடும் என கூறி அனுப்பி வைக்கப்பட்ட நண்பன் தான் வடிவேலு.   ராஜ்கிரணை சந்தித்த இடத்தில் அந்த நாளை மிகவும் கலகலப்பாக மாற்றியுள்ளார். ஆனால் அந்த தருணத்தில் கூட வடிவேலு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கவில்லையாம்.

அதன்பிறகு 2,3 ஆண்டுகள் கழித்து ராசாவின் மனசிலே படத்தில் ஒரு கேரக்டருக்கு புதுமுகத்தை போடலாம் என நினைக்கும்போது வடிவேலு முகம் நியாபகம் வந்தது. அப்படித்தான் வடிவேலு சினிமா உள்ளே வந்தார்.

Also Read: Benefits of Sprouts: முளைக்கட்டிய தானியங்களால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

ஏத்தி விட்ட கமல்

வடிவேலு எடுத்த எடுப்பிலேயே காமெடியில் தனி நபராக கலக்கவில்லை. காரணம் அப்போது கவுண்டமணி, செந்தில் ராஜ்ஜியம் செய்த காலம். இதனால் அவர்கள் படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்தார். அப்படித்தான் சிங்காரவேலன் படம் நடிக்கும்போது வடிவேலுவை பார்த்துள்ளார் கமல். தொடர்ந்து தான் இயக்கிய தேவர் மகன் படத்தின் இசக்கி என்ற கனமான கேரக்டர் ஒன்றை தூக்கிக் கொடுத்து நடிப்புத்திறமையை வெளிப்படுத்த உதவினார். அதன்பிறகு வடிவேலு கேரியர் கிட்டதட்ட ஒரு 20 ஆண்டுகள் டாப் கியரில் தான் சென்றது.

நடிக்காத நடிகர்களே கிடையாது 

வடிவேலு ரஜினி, கமல்,விஜயகாந்த், சத்யராஜ், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என அன்றைய காலக்கட்டத்தில் நடிக்காத நடிகர்களின் படங்களே கிடையாது. அதுமட்டுமல்லாமல் புதுமுகங்களின் படங்களையும் தனது அசாத்திய காமெடியால் இன்றளவும் நினைவில் வைத்திருக்க செய்துள்ளார். அதேபோல் இடுகாட்டில் பிணம் எரிப்பவர் தொடங்கி நரிக்குறவர் மக்கள் வரை அவர் போடாத வேடங்களே இல்லை. எளிய மக்களின் பிரச்சினைகளை நகைச்சுவை வடிவில் வடிவேலு பிரமாதமாக சொல்லுவார்.

காணாமல் போன வடிவேலு 

தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி வேடங்களில் நடித்த வடிவேலு இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் மூலம் ஹீரோவானார். அப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இந்திரலோகத்தில் நா.அழகப்பன், தெனாலி ராமன், எலி என அடுத்தடுத்து படம் நடித்தாலும் எதுவும் பெரிதாக செல்லவில்லை. இடையே திமுகவுக்கு ஆதரவாக 2011 சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்தது அவர் எடுத்த மகா தவறான முடிவாக அமைந்தது. அந்த தேர்தலில் திமுக தோற்க, வடிவேலுவை அடுத்த 10 ஆண்டுகளுக்கு சினிமா பக்கமே வரமுடியாத அளவுக்கு செய்து விட்டது.

மீண்டும் வந்த மாமன்னன்

இதனைத் தொடர்ந்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன் என தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ள வடிவேலு அடுத்ததாக மாரீசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்பது போல வடிவேலு இல்லாத ஒரு சினிமா வரலாறு என்றும் கிடையாது. இனியும் எழுதப்பட மாட்டாது. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வடிவேலு!

பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
கல்லீரலை சுத்தப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
Exit mobile version