5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Lubber Pandhu Movie Review : ஒவ்வொரு சீனும் சிக்சரு… லப்பர் பந்து விமர்சனம் இதோ!

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் , வதந்தி சஞ்சனா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இவர்கள் தவிர்த்து காலி வெங்கட் , தேவதர்ஷினி, பால சரவணன் , கீதா கைலாசம் உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் உள்ளார்கள்.

Lubber Pandhu Movie Review : ஒவ்வொரு சீனும் சிக்சரு… லப்பர் பந்து விமர்சனம் இதோ!
லப்பர் பந்து
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Sep 2024 15:19 PM

கோலிவுட் சினிமாவில் இதுவரை விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் பலவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விளையாட்டுடன் சரியான கதையும், வசனங்களும் இடம்பெறும் படங்கள் மக்களிடையே விரைவாக சென்றுவிடும். அந்த அடிப்படையில் உருவான ‘லப்பர் பந்து’ படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகின்றது. வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண்.பியார் பிரேமா காதல் , தாராள பிரபு , இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்  உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு இவர் நடித்து வெளியான பார்க்கிங் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது லப்பர் பந்து படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் , வதந்தி சஞ்சனா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இவர்கள் தவிர்த்து காலி வெங்கட் , தேவதர்ஷினி, பால சரவணன் , கீதா கைலாசம் உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் உள்ளார்கள்.

ரப்பர் பந்துகள் ரூ. 15-க்கு விற்பனையான ஒரு காலகட்டத்தில் படத்தின் கதை தொடங்குகிறது. கிரிக்கெட் மீது ஈடுபாடு கொண்ட சிறுவனாக அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் இருக்கும் ஹரிஷ் கல்யாண் பள்ளியை கட் அடித்துவிட்டு கிரிக்கெட் ஆட செல்கிறார். ஜாலி ஃப்ரெண்ட்ஸ் டீம் என்ற அணியில் இருக்கும் டிஎஸ்கே, தாழ்த்தப்பட்ட சாதியை காரணம் காட்டி ஹரிஷ் கல்யாணை அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்று கூறுகிறார். ஆனால் அந்த அணியின் கேப்டனாக இருக்கு காளி வெங்கட் என் அணி ஜெயிக்கனும் அதனால் இவன் விளையாடுவான் என்று ஹரிஷ் கல்யாணை டீமில் சேர்த்துக்கொள்கிறார். வேண்டா வெறுப்பாக இதற்கு ஒத்துக்கொள்கிறார் டிஎஸ்கே.

அப்போது நடைபெறும் போட்டியில் எதிரணியில் பெயர்போன கிரிக்கெட் ப்ளேயராக இருக்கிறார் கெத்து பூமாலை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் அட்டகத்தின் தினேஷ். விஜயகாந்த் பாட்டு பின்னணியில் ஒலிக்க கெத்து மட்டையை கையில் எடுத்தார் என்றால் எல்லா பந்தும் மைதானத்திற்கு வெளியேதான். கெத்து பயப்படும் ஒரே நபர் அவரது மனைவி. வேலைக்கு செல்வதாக சொல்லிக்கொண்டு கிரிக்கெட் விளையாட செல்கிறார் கெத்து. பெரும் பில்டப் உடன் அந்த பகுதியின் சச்சின் போல கொண்டாடப்படும் அட்டகத்தி தினேஷ் பேட்டிங்கில் வெளுத்து வாங்குகிறார். கெத்து என்கிற பூமாலையான அட்டக்கத்தி தினேஷின் பேட்டிங்கில் அவருடைய பலவீனத்தை சரியாக ஹரிஷ் கல்யாண் கணித்தாலும், அவருக்கு பவுலிங் வாய்ப்பு கிடைக்காமல் போகவே அங்கிருந்து விரக்தியுடன் கிளம்பி விடுகிறார்.

அதனை தொடர்ந்து லப்பர் பந்து ரூ. 35-க்கு விற்கப்படும் காலத்தில் கதை செல்கிறது. பள்ளி சிறுவனாக இருந்த ஹரிஷ் கல்யாண் தற்போது இளைஞனாக கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக திகழ்கிறார். சாதி காரணம் காட்டி ஜாலி ஃப்ரெண்ட்ஸ் டீமில் இருந்து வெளியேற்றப்பட்ட ஹரிஷ் கல்யாண் அந்த ஊரை சுற்றி எந்த கிரிக்கெட் டீம் விளையாட அழைத்தாலும் அந்த டீமிற்காக விளையாடி ஜெயித்துக் கொண்டிருந்தார். தனக்கான ஒரு டீம் இல்லை என்றாலும் எல்லா டீமிலும் ஹரிஷ் கல்யாணின் விளையாட்டு கொண்டாடப்பட்டது.

மறுபக்கம் அட்டக்கத்தி தினேஷ் மகள் சஞ்சனாவும் ஹரிஷ் கல்யாணும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். கிரிக்கெட் போட்டி ஒன்றின் போது அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் இடையில் சின்ன  மோதல் ஏற்படுகிறது. இந்த மோதல் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி ஒரு கட்டத்தில் சண்டையில் முடிகிறது. தினேஷின் மகள் சஞ்சனாவுக்கும் ஹரிஷ் கல்யாணுக்கும் இடையில் காதல் வளர்கிறது. விளையாட்டில் இரு ஆண்களுக்கு இடையிலான ஈகோ பிரச்சனை. அதே விளையாட்டால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல் , சாதியை காரணம் காட்டி கதாபாத்திரங்களுக்கு இடையில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் பல்வேறு அம்சங்களை வைத்து ஒரு சிறப்பான திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.

Also read… ”இந்த உலகத்துல யோகியவானா இருந்தா பிழைக்க முடியாது” – ரஜினி!

ஹரிஷ் கல்யாண் மற்றும் தினேஷ் இருவரும் தங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட அந்த சிக்கல்களிலிருந்து மீண்டது எப்படி என்பதை விறுவிறுப்பாகவும், நெகிழ்ச்சியான தருணங்களுடனும் சொல்கிறது ‘லப்பர் பந்து’. படத்தின் நாயகர்களாக வரும் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் காட்சிகளை விட அவர்களின் நண்பர்களாக வருபர்களின் காட்சிகளை திரையரங்கில் கைத்தட்டி கொண்டாடி ரசித்தனர் ரசிகர்கள். இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாணின் நண்பராக பால சரவணனும் அட்டக்கத்தி தினேஷின் நண்பராக ஜென்சன் திவாகர் இருவரும் காமெடியில் கலக்கியிருக்கின்றனர். படத்தில் இவர்கள் இருக்கும் ஒவ்வொரு காட்சிக்குக் ரசிகரக்ள் தியேட்டரில் ஆரவாரம் செய்து கொண்டாடும் அளவிற்கு இவர்களுக்கான காமெடி சீன்கள் எழுதப்பட்டுள்ளது.

காமெடி மட்டும் இன்றி காதல், பிரிவால் ஏற்படும் வலி, உறவுகளுக்கு இடையேயான சிக்கல் சாதியால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை மிகவும் எளிமையாக மக்களுக்கு புரியும் வகையில் கூறியிருக்கிறார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் ஒரு நல்ல படத்தை பார்த்துவிட்டு வருகிறோம் என்ற மன திருப்தியை உணர முடியும். நல்ல கதையை மிகவும் நேர்த்தியாக மக்களிடம் கொண்டு சேர்த்த இயக்குநருக்கு வாழ்த்துகள்…

Latest News