லப்பர் பந்து படத்தின் ஓடிடி வெளியீடு ஒத்திவைப்பு… காரணம் இதுதான்!
இந்தப் படத்தின் வெற்றிக்கு கேரக்டர்களின் சிறப்பான தேர்வு சரியாக கைக்கொடுத்துள்ளது. இயல்பான கதைக்களத்தில் இயல்பான காட்சிகளையும் சரியான ஸ்கிரிப்டுடன் மிக்ஸ் செய்துள்ளார் தமிழரசன் பச்சமுத்து. படத்தின் கதை நகர்விற்கு பால சரவணன், ஜென்சன் திவாகர் போன்றவர்களின் கேரக்டர்களும் மிகச்சிறப்பாக உதவியுள்ளது.
நடிகர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ‘லப்பர் பந்து’ படத்தின் ஓடிடி வெளியீடு தள்ளிவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விளையாட்டுடன் சரியான கதையும், வசனங்களும் இடம்பெறும் படங்கள் மக்களிடையே விரைவாக சென்றுவிடும். அந்த அடிப்படையில் உருவான ‘லப்பர் பந்து’ படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகின்றது. வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண்.பியார் பிரேமா காதல் , தாராள பிரபு , இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு இவர் நடித்து வெளியான பார்க்கிங் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது லப்பர் பந்து படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் , வதந்தி சஞ்சனா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இவர்கள் தவிர்த்து காலி வெங்கட் , தேவதர்ஷினி, பால சரவணன் , கீதா கைலாசம் உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் உள்ளார்கள்.
ரப்பர் பந்துகள் ரூ. 15-க்கு விற்பனையான ஒரு காலகட்டத்தில் படத்தின் கதை தொடங்குகிறது. கிரிக்கெட் மீது ஈடுபாடு கொண்ட சிறுவனாக அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் இருக்கும் ஹரிஷ் கல்யாண் பள்ளியை கட் அடித்துவிட்டு கிரிக்கெட் ஆட செல்கிறார். ஜாலி ஃப்ரெண்ட்ஸ் டீம் என்ற அணியில் இருக்கும் டிஎஸ்கே, தாழ்த்தப்பட்ட சாதியை காரணம் காட்டி ஹரிஷ் கல்யாணை அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்று கூறுகிறார். ஆனால் அந்த அணியின் கேப்டனாக இருக்கு காளி வெங்கட் என் அணி ஜெயிக்கனும் அதனால் இவன் விளையாடுவான் என்று ஹரிஷ் கல்யாணை டீமில் சேர்த்துக்கொள்கிறார். வேண்டா வெறுப்பாக இதற்கு ஒத்துக்கொள்கிறார் டிஎஸ்கே.
Also read… வேட்டையன் படம் குறித்து நடிகர் ரக்சன் பகிர்ந்த நெகிழ்ச்சி பதிவு!
அப்போது நடைபெறும் போட்டியில் எதிரணியில் பெயர்போன கிரிக்கெட் ப்ளேயராக இருக்கிறார் கெத்து பூமாலை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் அட்டகத்தின் தினேஷ். விஜயகாந்த் பாட்டு பின்னணியில் ஒலிக்க கெத்து மட்டையை கையில் எடுத்தார் என்றால் எல்லா பந்தும் மைதானத்திற்கு வெளியேதான். கெத்து பயப்படும் ஒரே நபர் அவரது மனைவி. வேலைக்கு செல்வதாக சொல்லிக்கொண்டு கிரிக்கெட் விளையாட செல்கிறார் கெத்து. பெரும் பில்டப் உடன் அந்த பகுதியின் சச்சின் போல கொண்டாடப்படும் அட்டகத்தி தினேஷ் பேட்டிங்கில் வெளுத்து வாங்குகிறார். கெத்து என்கிற பூமாலையான அட்டக்கத்தி தினேஷின் பேட்டிங்கில் அவருடைய பலவீனத்தை சரியாக ஹரிஷ் கல்யாண் கணித்தாலும், அவருக்கு பவுலிங் வாய்ப்பு கிடைக்காமல் போகவே அங்கிருந்து விரக்தியுடன் கிளம்பி விடுகிறார்.
அதனை தொடர்ந்து லப்பர் பந்து ரூ. 35-க்கு விற்கப்படும் காலத்தில் கதை செல்கிறது. பள்ளி சிறுவனாக இருந்த ஹரிஷ் கல்யாண் தற்போது இளைஞனாக கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக திகழ்கிறார். சாதி காரணம் காட்டி ஜாலி ஃப்ரெண்ட்ஸ் டீமில் இருந்து வெளியேற்றப்பட்ட ஹரிஷ் கல்யாண் அந்த ஊரை சுற்றி எந்த கிரிக்கெட் டீம் விளையாட அழைத்தாலும் அந்த டீமிற்காக விளையாடி ஜெயித்துக் கொண்டிருந்தார். தனக்கான ஒரு டீம் இல்லை என்றாலும் எல்லா டீமிலும் ஹரிஷ் கல்யாணின் விளையாட்டு கொண்டாடப்பட்டது.
Also read… 22 வருடங்களாக டாப் ஹீரோயினாக வலம் வருபவர்தான் இந்த சிறுமி… யார் தெரியுதா?
மறுபக்கம் அட்டக்கத்தி தினேஷ் மகள் சஞ்சனாவும் ஹரிஷ் கல்யாணும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். கிரிக்கெட் போட்டி ஒன்றின் போது அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் இடையில் சின்ன மோதல் ஏற்படுகிறது. இந்த மோதல் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி ஒரு கட்டத்தில் சண்டையில் முடிகிறது. தினேஷின் மகள் சஞ்சனாவுக்கும் ஹரிஷ் கல்யாணுக்கும் இடையில் காதல் வளர்கிறது. விளையாட்டில் இரு ஆண்களுக்கு இடையிலான ஈகோ பிரச்சனை. அதே விளையாட்டால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல் , சாதியை காரணம் காட்டி கதாபாத்திரங்களுக்கு இடையில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் பல்வேறு அம்சங்களை வைத்து ஒரு சிறப்பான திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.
Since Lubber Pandhu is still performing exceptionally well in theaters, we are postponing its streaming release. The new streaming date will be announced later on our social media handles.
Follow us and keep the notifications ON for the streaming announcement. pic.twitter.com/r6VhWyDjyt
— Simply South (@SimplySouthApp) October 16, 2024
அக்டோபர் 18-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போதும் திரையரங்கில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது ‘லப்பர் பந்து’. படம் தற்போதும் திரையரங்குகளில் சிறப்பாக ஓடிவரும் நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி வெளியீட்டை தள்ளி வைப்பதாக சிம்ப்ளி சவுத் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.