ஆஸ்கர் விருது பெற்ற ‘ஹாரி பாட்டர்’ நடிகை டேம் மேகி ஸ்மித் காலமானார் - Tamil News | Harry Potter fame Maggie Smith has died aged 89 | TV9 Tamil

ஆஸ்கர் விருது பெற்ற ‘ஹாரி பாட்டர்’ நடிகை டேம் மேகி ஸ்மித் காலமானார்

Published: 

28 Sep 2024 14:25 PM

ஹாரி பாட்டர் திரைப்படங்களும் அதில் வரும் கதாப்பாத்திரங்களும், சிறு வயதில் மட்டுமல்ல, வளர்ந்த இளைஞர்களுக்கும் பிடித்த விஷயமாகும். இதில் ஹீரோவாக நடித்த டேனியல் ரேட்க்ஃப்ளிஃப் மட்டுமன்றி, பிற பாத்திரங்களும் ரசிகர்களின் மனதில் நின்றிருக்கிறது. இதில், முக்கிய கேரக்டர்களுள் ஒருவராக வந்தவர், மேகி ஸ்மித். இவர், ஆசிரியை மெக்கானகல் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆஸ்கர் விருது பெற்ற ஹாரி பாட்டர்’ நடிகை டேம் மேகி ஸ்மித் காலமானார்

நடிகை டேம் மேகி ஸ்மித்

Follow Us On

ஹாரி பாட்டர் படங்களின் மூலம் மிகவும் பிரபலமான மூத்த நடிகை டேம் மேகி ஸ்மித் தனது 89ஆவது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஹாரி பாட்டர் படங்கள் மற்றும் டோவ்ன்டன் அபே ஆகியவற்றில் நடித்ததற்காக மிகவும் பிரபலமான ஹாலிவுட் நடிகை டேம் மேகி ஸ்மித். பிரபல ஹாலிவுட் நடிகை மேகி ஸ்மித். இவர் ‘தி பிரைம் ஆப் மிஸ் ஜீன் பிராடி’, ‘ஹாரி பாட்டர்’, ‘டோவ்ன்டன் அபே’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். குறிப்பாக ஹாரி பாட்டர் படங்களில் இவர் ஏற்று நடித்த புரொபசர் மெக்கோனகல் கதாபாத்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது. தற்போது 89-வயதான இவருக்கு வயது முதிர்வு காரணமாக உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

1969ஆம் ஆண்டு வெளியான ‘தி ப்ரைம் ஆஃப் மிஸ் ஜீன் ப்ரோடி’ என்ற படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகைக்கான விருது வென்றார் டேம் மேகி ஸ்மித். அதே போல 1978ல் ‘கலிபோர்னியா சூட்’ படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் வென்றார். மிகச்சிறந்த பிரிட்டிஷ் நடிகைகளில் ஒருவராக போற்றப்படும் இவர், ஏழு முறை ஆஸ்கருக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளார். தி பிரைம் ஆஃப் மிஸ் ஜீன் பிராடி மற்றும் கலிபோர்னியா சூட் ஆகிய படங்களுக்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஹாரி பாட்டர் திரைப்படங்களும் அதில் வரும் கதாப்பாத்திரங்களும், சிறு வயதில் மட்டுமல்ல, வளர்ந்த இளைஞர்களுக்கும் பிடித்த விஷயமாகும். இதில் ஹீரோவாக நடித்த டேனியல் ரேட்க்ஃப்ளிஃப் மட்டுமன்றி, பிற பாத்திரங்களும் ரசிகர்களின் மனதில் நின்றிருக்கிறது. இதில், முக்கிய கேரக்டர்களுள் ஒருவராக வந்தவர், மேகி ஸ்மித். இவர், ஆசிரியை மெக்கானகல் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

Also read… ரஜினி, அஜித், மோகன்லால், மம்முட்டியிடம் உள்ள பொதுவான குணங்கள் – மஞ்சு வாரியர் பகிர்ந்த தகவல்

‘டவுன்டவுன் அப்பே’ மற்றும் ஹாரி பாட்டர் படங்கள் மூலமாக இளம் தலைமுறையினர் மத்தியிலும் பிரபலமாக இருந்தார் டேம் மேகி ஸ்மித். குறிப்பாக ஹாரி பாட்டர் படங்களில் இவர் ஏற்று நடித்த ப்ரொபசர் மெக்கோனக்கல் கதாபாத்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஹாரி பாட்டர் படத்தில் எத்தனையோ கதாப்பாத்திரங்கள் இருந்தாலும், அதில் ஒரு சில கேரக்டர்கள் மட்டும்தான் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். அதில் ஒருவர், ப்ரொபசர் மெக்கோனக்கல் கதாபாத்திரம்.

Also read… Meiyazhagan Movie Review: ’மெய்யழகன்’… நிஜமாவே அவ்வளவு அழகானவன் – விமர்சனம் இதோ!

மார்க்ரெட் ஸ்மித் என்ற இயற்பெயரை கொண்ட அவர் திரைப்படங்களுக்காக டேம் மேகி ஸ்மித் என்ற பெயரை தேர்வு செய்துகொண்டார். தனது சக நடிகரான ராபர்ட் ஸ்டீபன்ஸை 1967ல் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு மகன்கள். டேம் மேகி ஸ்மித்தின் மகன்கள் இதுகுறித்து வெளியிட்டுள்ள ஒருஅறிக்கையில் , “வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) அதிகாலை மருத்துவமனையில் டேம் மேகி ஸ்மித் காலமானார். தீவிரமான தனிப்பட்ட நபரான அவர் இறுதியில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இருந்தார்.” என்று தெரிவித்துள்ளனர்.

நண்டில் இப்படி ஒரு விஷயம் இருக்கா? அறிந்திடாத மருத்துவ நன்மைகள்..!
மன அழுத்தம் குறைய வேண்டுமா? அப்போ இது ஒன்னே போதும்.
நடிகை ஹன்சிகா மோத்வானியின் ரீசென்ட் ஆல்பம்
அழகியே... மிருணாள் தாகூரின் அசத்தல் ஆல்பம்
Exit mobile version