Hema Committee Report : நடிப்பு வாய்ப்புக்காக பாலியல் சுரண்டல்.. மோலிவுட்டின் மறுபக்கம்.. ஷாக் கொடுத்த ரிப்போர்ட்
இந்த ஹேமா கமிஷன் ரிப்போர்ட்டில் வேறு சில பகீர் தகவல்களும் இடம் பெற்றுள்ளன. அதாவது மலையாள சினிமாவில் பெண்கள் மட்டுமின்றி நடிகர்களும் கூட பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக ஹேமா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மலையாளத் துறையில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் உட்பட மொத்தம் 15 ஆண் பிரபலங்களின் பிடியில்தான், மொத்த மலையாள சினிமாவும் அடங்கியிருக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவே கொண்டாடும் மலையாள சினிமாவில் நடிப்பு வாய்ப்புகளுக்காக பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதாக ஹேமா கமிட்டி அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாள சினிமா துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பரவலான மற்றும் தொடர்ச்சியான பாலியல் துன்புறுத்தல்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் நீதிபதி ஹேமா குழு அறிக்கை வெளியிடப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் அத்துமீறல் செய்யப்பட்டார். இந்த சம்பவம் திரையுலகினரை அதிர வைத்தது. பின்னர் நடத்திய விசாரணையில் நடிகர் திலீப் தூண்டுதலின் பேரில் இந்த பலாத்கார சம்பவம் நடந்தது என்று வெளியான தகவல் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஹேமா கமிட்டி வெளியிட்ட தகவல்கள் இந்திய சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஹேமா கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷனின் ரிப்போர்ட் இன்று வெளியானது. இதில் நடிகைகள் மற்றும் பெண்கள் கலைஞர்கள் எதிர்கொள்ளும் பல வித சிக்கல்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளன. மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை ஆய்வு செய்து, 2019 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழுவான நீதிபதி ஹேமா குழுவினர் அறிக்கையை சமர்பித்தனர்.
இந்த அறிக்கையின் நகல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது. இந்த கமிஷன் கடந்த 2019-ம் ஆண்டே அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. ஆனால் அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. இதற்கு மலையாள சினிமா உலகில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கிட்டத்தட்ட 51 பேரின் வாக்குமூலத்தின்படி இந்த அறிக்கை தயாரானது. அதே சமயத்தில் மொத்த மலையாள திரையுலகமும் 15 ஆண் பிரபலங்களின் பிடியில் உள்ளது என்றும், பல நடிகைகள் ஓட்டலில் தனி அறையில் தங்கியிருக்க அஞ்சியதாகவும் கூறப்பட்டுள்ளது.
235 பக்கம் கொண்ட அறிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன. சினிமாவில் அட்ஜஸ்ட் செய்து கொண்டு, சமரசம் செய்து கொண்டு இருக்க வேண்டும் என தங்களிடம் சொல்லப்பட்டதாக பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஒட்டுமொத்த மலையாள திரையுலகையே சில ஆண்கள்தான் கட்டுப்படுத்துகிறார்கள். மேலும் அவர்கள் சினிமாவில் பணிபுரியும் மற்ற நபர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள். சினிமாவில் இந்த நிலை மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also read… ’கோட்’ படத்தில் விஜயகாந்த்… பிரேமலதா விஜயகாந்திற்கு நேரில் நன்றி கூறிய விஜய்!
இதற்கிடையே இந்த ஹேமா கமிஷன் ரிப்போர்ட்டில் வேறு சில பகீர் தகவல்களும் இடம் பெற்றுள்ளன. அதாவது மலையாள சினிமாவில் பெண்கள் மட்டுமின்றி நடிகர்களும் கூட பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக ஹேமா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மலையாளத் துறையில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் உட்பட மொத்தம் 15 ஆண் பிரபலங்களின் பிடியில்தான், மொத்த மலையாள சினிமாவும் அடங்கியிருக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமாவில் எந்த நடிகைகள் இருக்க வேண்டும், எந்த நடிகையை, படங்களில் நடிக்க வைக்க வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிக்கும் அதிகாரம் மிக்க குழுவாக இந்த 15 பவர்ஃபுல் பிரபலங்களும் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.