Cinema Year Ender: 2024-ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய மொழி படங்களின் லிஸ்ட் இதோ!

2024-ம் ஆண்டு முடிவுக்கு வர இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை இந்த ஆண்டு முழுவதும் நடந்த பல நிகழ்வுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய மொழி படங்கள் என்னென்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

Cinema Year Ender: 2024-ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய மொழி படங்களின் லிஸ்ட் இதோ!

தென்னிந்திய மொழி படங்கள்

Published: 

16 Dec 2024 14:39 PM

கல்கி 2898: இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் டோலிவுட்டின் பிரபல நடிகர் பிரபாஸ் நாயகனாக நடித்த படம் கல்கி 2898. இந்தப் படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து நடிகர்கள் கமல்ஹாசன், அமிதாப் பச்சன்,  தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசை அமைத்திருந்தார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தயாரித்திருந்தது. இந்தப் படம் பான் இந்திய மொழிகளில் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. புராண கதையுடன் இணைந்து சயன்ஸ் பிக்‌ஷன் படமாக உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அத்துடன் வசூலிலும் ரூபாய் 1000 கோடிக்கு அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடதக்கது.

மகாராஜா: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 50-வது படமாக உருவான ‘மகாராஜா’ திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியாகி திரையரங்குகளில் சூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தை இயக்குநர் நித்திலன் இயக்கியுள்ளார். குரங்கு பொம்மை என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் நித்திலன் சாமிநாதன்.

யோகி பாபு நடிப்பில் வெளியான அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து அடுத்து நடிகர் விஜய் சேதுபதியின் 50 – வது படமான ‘மகாராஜா’ என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர்களுடன் இணைந்து நடிகர்கள் நட்டி, மம்தா மோகன்தாஸ், சிங்கம் புலி, அபிராமி, வினோத் சாகர், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத் இசையமைத்திருந்தார். படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்றதுபோல ஓடிடியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்: கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி விஜய் நடிப்பில் அவரது 68-வது படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. நடிகர் விஜய் இந்தப் படத்தில் அப்பா, மகன் என இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

பிரபல ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25-வது படமாக கோட் படம் உருவானது. நீண்ட நாட்களாக தொடர்ந்து சீரியஸான கேரக்டர்களில் நடித்து வந்த விஜய் இந்தப் படத்தில் காமெடி, காதல், கிண்டல், சைலன்ட், டான்ஸ், எமோஷன், டயலாக் டெலிவரி என மாஸ் காட்டியுள்ளார். டான்ஸ், டயலாக் டெலிவரி என தெறிக்கவிட்டுள்ளார். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தைத் தயாரிதிருந்தார்.

Also read… தீவிர சினிமா ரசிகன் டூ எஸ்கே 25… ரசிகர்களுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன்

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் விஜயுடன் இணைந்து சினேகா, மீனாக்‌ஷி செளதரி, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், வைபவ் , பிரேம்ஜி அஜ்மல் அமீர், மோகன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். படம் உலக அளவில் 460 கோடிகள் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸை கலக்கியுள்ளது.

மஞ்சுமல் பாய்ஸ்: இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் நடிகர்கள் சௌபின், ஸ்ரீநாத் பாசி உள்பட பலர் நடித்த படம் மஞ்சுமல் பாய்ஸ். நடிகர் சௌபின் தனது பறவா தயாரிப்பு நிறுவனம் சார்பில் தனது நண்பர்களுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்தார். கேரளாவின் மஞ்சும்மல் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றனர்.

சுற்றுலா வந்த நிலையில் அந்த நண்பர்களில் ஒருவர் டெவில்ஸ் கிச்சன் என்கிற 900 அடிகள் கொண்டதாகக் கருதப்படும் மலைக்குகைக்குள் விழுந்துவிடுகிறார். உடன் வந்த நண்பர்கள் போராடி அவனை மீட்ட உண்மைக் கதையை மையமாக வைத்து மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் எடுக்கப்பட்டது.

மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்தப் படம் மஞ்சும்மல் பாய்ஸ். மலையாளம், தமிழ், தெலுங்கு என பான் இந்திய மொழிகளிலும் சக்கை போடு போட்ட இப்படம் 200 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது.

Also read… அரசு சொத்தை விலை பேசினேனா? விக்னேஷ் சிவன் விளக்கம்!

ஆவேஷம்: இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தப் படம் ஆவேஷம். நகைச்சுவை, அதிரடி நிறைந்த இந்தப் படத்தை பார்த்தவர்கள் கொண்டாடி தீர்த்தனர். படத்திற்கு படம் வேறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தும் ஃபகத் இந்தப் படத்தில் வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

கல்லூரி மாணவர்களுடன் எதிர்பாராத விதமாக ஏற்படும் நட்பு ஃபகத் பாசிலை எப்படி மாற்றுகிறது என்பதை கதைக்களமாக இந்தப் படம் வெளியனது. உலகம் முழுவதும் சுமார் 156 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது இந்தப் படம்.

இணையத்தை கலக்கும் கீர்த்தியின் கல்யாண கொண்டாட்ட போட்டோஸ்
கருவளையம் நீங்க சூப்பர் டிப்ஸ்
நடிகை அதுல்யா ரவி பற்றிய சுவாரஸ்ய தகவல்!
கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டிலின் திருமண ஆல்பம்!