’வேட்டையன்’ திரைப்படத்தின் அடுத்த பாடல் அப்டேட்..! - Tamil News | Hey Super Star Da Song promo Video Out From Rajinis Vettaiyan Movie | TV9 Tamil

’வேட்டையன்’ திரைப்படத்தின் அடுத்த பாடல் அப்டேட்..!

Published: 

19 Sep 2024 21:46 PM

The Hunter : ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள வேட்டையன் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் "ஹே சூப்பர் ஸ்டாருடா"செப்டம்பர் 20 வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. ரஜினி ரசிகர்களுக்கு செம சர்ப்பிரைஸை படக்குழு கொடுத்துள்ளது . தற்போது இப்பாடலின் ப்ரெமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது

’வேட்டையன்’ திரைப்படத்தின் அடுத்த பாடல் அப்டேட்..!

வேட்டையன் (கோப்பு படம்)

Follow Us On

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நடித்து வரும் “வேட்டையன்” திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “தி ஹண்டர் ” என்ற பாடல் செப்டம்பர் 20ல் வெளியாகவுள்ளது எனப் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  இந்நிலையில் இப்பாடலின் அப்டேட்  ரசிகர்கள் மத்தியில் சர்ப்ரைஸை கொடுத்துள்ளது. லைகா நிறுவனம் இப்பாடலின் “ப்ரெமோ” வீடியோவை வெளியிட்டுள்ளது. இப்படலை முன்னணி பாடகரான சித்தார்த் பஸ்ரூர் மற்றும் அனிருத்  இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலின் வெளியீடு மற்றும் இத்திரைப்படத்தின் முன்னோட்டம் நாளை செப்டம்பர் 20ல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது .

வேட்டையன்

நடிகர் ரஜினி ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை “ஜெய் பீம்”  படத்தை இயக்கிய ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார்.

Also Read :எல்லாமே சென்னைதான்.. அம்மா ஸ்ரீதேவி குறித்து உருக்கமாக தமிழில் பேசிய ஜான்வி!

இத்திரைப்படத்தில் பிரபல முன்னணி நடிகர்களான அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்படப் பலர் நடித்துள்ளனர். இப்படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது.  இத்திரைப்படமானது குறிப்பாகத் தென் மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு மும்பை ராஜஸ்தான் பகுதிகளில் நடைபெற்றதைத் தொடர்ந்து தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்தது.

தற்போது இப்படமானது வரும் அக்டோபர் 10ல் வெளியாக உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.”லைகா நிறுவனம்” தயாரிக்கும் இப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் போலி என்கவுண்டருக்கு எதிரான கதைக்களம் கையாளப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் கல்விக் கொள்கைக்கு ஆதரவான பல கருத்துக்களும் இந்த படத்தில் முன்வைக்கப் பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தில் ரஜினிகாந்த் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ள சூழலில் படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த், வேட்டையன் திரைப்படத்தில் இஸ்லாமியராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. ரஜினி, ஏற்கனவே லால் சலாம் படத்தில் இஸ்லாமியராக நடித்துள்ளார்.

Also Read : எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத சிவகார்த்திகேயனின் சில படங்கள்.. லிஸ்ட் இதோ!

கங்குவா

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் மற்றும் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள “கங்குவா ” திரைப்படமும் அக்டோபர் 10ல் வெளியாக இருந்த நிலையில் தற்போது “வேட்டையன்’ திரைப்பட வெளியீட்டால் கங்குவா  திரைப்பட ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. தற்போது ரசிகர்களிடையேயே வேட்டையன் திரைப்படத்தின் பாடல் வரவேற்பைப் பெற்று வருகிறது.
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version