Ilaiyaraja: ஐஐடி மெட்ராஸில் இளையராஜா பெயரில் இசை கற்றல் & ஆராய்ச்சி மையம்!
Ilaiyaraja and IIT Madras: ஐஐடி வளாகத்திற்குள், மேஸ்ட்ரோ இளையராஜா இசை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பள்ளி மையம் ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், ஐஐடி வளாகத்தில் நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில் நிறைவேறியது. இசையமைப்பாளர் இளையராஜாவும், ஐஐடி இயக்குனர் காமகோடியும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர்.
சென்னை ஐஐடி மெட்ராஸில் ‘மேஸ்ட்ரோ இளையராஜா இசை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்’ அமைப்பதற்கான ஒப்பந்தம், சென்னை ஐஐடி மற்றும் இளையராஜா மியூசிக் மற்றும் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இடையே கையெழுத்தானது. முற்றிலும் மூங்கிலால் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு மையம், ஒரு ஆண்டில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என ஐஐடி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரங்களை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கான ஒருவார நிகழ்ச்சி மெட்ராஸ் ஐஐடி வளாகத்தில் நேற்று (மே 20) மாலை துவங்கியது. திரிபுரா ஆளுநர் இந்திர சேனா, இசையமைப்பாளர் இளையராஜா, மெட்ராஸ் ஐஐடி இயக்குநர் காமகோடி ஆகியோர் இந்த விழாவை துவக்கி வைத்தனர்.
இசைஞானி என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இளையராஜா. இவரது பல படங்கள் இவருக்கே போட்டியாக அமைந்தன. எண்பதுகளிலும் 90களிலும் இவரது பாடல்களை அடித்துக் கொள்ள ஆட்களே இல்லை என்ற அளவில் விமர்சனங்களை பெற்றுள்ளார். தற்போது அடுத்தடுத்து இசை கச்சேரிகளையும் நடத்தி வருகிறார் இளையராஜா. அடுத்ததாக ஜூலை மாதத்தில் சென்னையில் இவரது இசைக்கச்சேரி நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கான டிக்கெட் அறிமுக விழா சமீபத்தில் நடைபெற்றது. இதனிடையே தனுஷ் லீட் கேரக்டரில் நடித்து வரும் இளையராஜாவின் பயோபிக் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வருகிறது.
இந்நிலையில் ஐஐடி வளாகத்திற்குள், மேஸ்ட்ரோ இளையராஜா இசை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பள்ளி மையம் ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், ஐஐடி வளாகத்தில் நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில் நிறைவேறியது. இசையமைப்பாளர் இளையராஜாவும், ஐஐடி இயக்குனர் காமகோடியும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர்.
Also read… Actress Meena: சமந்தாவை மிஞ்சிய மீனா… புஷ்பா 2 பாடலுக்கு வேற லெவல் டான்ஸ்… வைரலாகும் வீடியோ!
விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா பேசும்போது, “கிராமத்தில் இருந்து இசை கற்றுக்கொள்வதற்காக சிறுவயதில் 400 ரூபாயுடன்வந்தேன். இசை என்றால் என்னவென்று அப்போது எனக்கு தெரியாது. இசையை கற்றுக்கொள்வதற்காக வந்த நான், இன்றைக்கு மையம் ஒன்றை ஆரம்பித்து அனைவருக்கும் கற்றுகொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நான் இசையை கற்றுக்கொள்ளவில்லை. இசை எனது மூச்சாக மாறிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.
”இசையில் நான் அந்த சாதனை செய்துவிட்டேன், இந்த சாதனை செய்துவிட்டேன் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால், நான் இசையில் எந்த சாதனையையும் செய்யவில்லை. கடந்த இருநூறு ஆண்டுகளில் மொசார்ட் போன்ற இசையமைப்பாளர் உலகில் யாரும் இல்லை. எனவே, இசையில் நான் சாதித்து விட்டதாக கூற முடியாது. இளையராஜா போல் பல இளையராஜாக்கள் உருவாக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.