5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பிரேம்ஜி திருமணம்… இணையத்தில் பரவும் வதந்திகள்… முற்றுப்புள்ளி வைத்த வெங்கட் பிரபு!

Actor Premji Wedding: கடந்த 9-ம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக தொடங்கின. அந்த புகைப்படங்களுடன் சில வதந்திகளும் பரவத் தொடங்கியது. பிரேம்ஜி திருமணத்திற்கு பெரியப்பா இளையராஜா குடுப்பத்திற்கு அழைப்பு இல்லை என்றும் ராயல்டி தொடர்ன்பான சர்ச்சைகளால் அவர் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை என்றும் வதந்திகள் பரவின.

பிரேம்ஜி திருமணம்… இணையத்தில் பரவும் வதந்திகள்… முற்றுப்புள்ளி வைத்த வெங்கட் பிரபு!
பிரேம்ஜி, இளையராஜா, இந்து
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 13 Jun 2024 17:54 PM

சேலத்தை சேர்ந்த பெண் இந்து உடன் நடிகர் பிரேம்ஜிக்கு கடந்த 9-ம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில் அவர்களின் வயது குறித்தும் இளையராஜ ஏன் திருமணத்தில் பங்கேற்கவில்லை என்றும் தொடர்ந்து இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன.  கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் பிரேம்ஜியின் திருமண பத்திரிகை இணையத்தில் வைரலான நிலையில் இயக்குநரும் பிரேம்ஜியின் அண்ணனுமான வெங்கட் பிரபு தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் பிரேம்ஜி திரையுலக வாரிசு நடிகர் என்றாலும் என்றும் இவரது அண்ணன் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தாலும் இவருக்கென தனி ரசிகர்கள் இருக்கத்தான் செய்தனர். வெங்கட்பிரபு கதை இல்லாமல் கூட படம் இயக்குவார். ஆனால், அவரது தம்பி இல்லாமல் படம் இயக்க மாட்டார் என்று அனைத்து தரப்பினரும் கிண்டலடித்து வந்தனர்.

44 வயதை கடந்த பிரேம்ஜி திருமணம் செய்யாமல் சுற்றித்திரிந்தார். ஆனால், கடந்த ஜனவரியில் ஆங்கில வருடப்பிறப்பில் இந்த ஆண்டு கண்டிப்பாக திருமணம் செய்யப்போகிறேன் என்ற தகவலை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.

இதனிடையே சில நாட்களுக்கு முன்பு, நடிகர் பிரேம்ஜிக்கும், இந்து என்ற பெண்ணுக்கும் ஜூன் 9 ஆம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் வைத்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் நடக்கவுள்ளதாக பத்திரிக்கை ஒன்று வெளியானது. இதனை உறுதி செய்து இயக்குநர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அதில் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மிகவும் நெருங்கிய வட்டத்தை அழைத்து நடக்கவுள்ளதால் தங்களின் ப்ரைவஸிக்கு மதிப்பளிக்குமாறும் கேட்டுக்கொண்டார். மேலும், மணமகள் மீடியாவை சேர்ந்தவர் இல்லை என்று தெரிவித்த வெங்கட் பிரபு, மணமக்களை ஆசிர்வதிக்குமாறும் அந்த அறிகையில் கேட்டுக்கொண்டார்.

Also read… Movies List : தியேட்டரில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?

இந்நிலையில் கடந்த 9-ம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக தொடங்கின. அந்த புகைப்படங்களுடன் சில வதந்திகளும் பரவத் தொடங்கியது. பிரேம்ஜி திருமணத்திற்கு பெரியப்பா இளையராஜா குடுப்பத்திற்கு அழைப்பு இல்லை என்றும் ராயல்டி தொடர்ன்பான சர்ச்சைகளால் அவர் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை என்றும் வதந்திகள் பரவின.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று பிரேம்ஜி தனது மனைவி இந்துவுடன் சென்று இளையராஜாவை சந்தித்த புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு தனது சமூகவலைதளபக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பிரேம்ஜியை விட அவரது மனைவி இந்து 20 வயது இளையவர் என்ற தகவல் தற்போது வைரலாகி வருகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று உறுதியாக தெரியவில்லை.

Latest News