’மஞ்சும்மல் பாய்ஸ்’ பஞ்சாயத்து ஓவர்… இழப்பீடு பெற்ற இளையராஜா – எவ்வளவு தெரியுமா?

Music Director Ilaiyaraaja: படத்திற்கு பிறகு சமூக வலைதளத்தில் அந்த பாடல் நண்பர்களுக்கான ஆந்தமாக மாறியது. அனைவரும் தங்களது நணபர்களுக்கு அந்த பாடலை டெடிகேட் செய்வது, ரீல்ஸ் போடுவது என சமூக வலைதளத்தின் உச்சத்திற்கு அந்த பாடல் சென்றது. இந்நிலையில் தற்போது மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் தான் இசையமைத்த பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக படத்தின் தயாரிப்பாளருக்கு இளையராஜா கடந்த மே மாதம் நோட்டீஸ் அனுப்பினார்.

’மஞ்சும்மல் பாய்ஸ்’ பஞ்சாயத்து ஓவர்... இழப்பீடு பெற்ற இளையராஜா - எவ்வளவு தெரியுமா?

இளையராஜா

Updated On: 

25 Sep 2024 15:28 PM

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தில் இளையராஜாவின் பாடல் அனுமதி இன்றி பயன்படுத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இளையராஜாவிற்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கேரளாவின் மஞ்சும்மல் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த நிலையில், அவர்களில் ஒருவன், டெவில்ஸ் கிச்சன் என்கிற 900 அடிகள் கொண்டதாகக் கருதப்படும் மலைக்குகைக்குள் விழுந்துவிட, உடன் வந்த நண்பர்கள் போராடி அவனை மீட்ட உண்மைக் கதையைத் தழுவி மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் எடுக்கப்பட்டது. இயக்குநர் சிதம்பரம் படத்தை இயக்க, சௌபின் ஷகிர், ஸ்ரீநாத் பாசி உள்பட பலர் நடித்திருந்தனர். சௌபின் ஷகிர் தனது பறவா தயாரிப்பு நிறுவனம் சார்பில் தனது நண்பர்களுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.

அபாயகரமான டெவில்ஸ் கிச்சன் குகை பகுதியில் கமல் தனது குணா படத்தை எடுத்த பிறகே அந்தக் குகை குறித்து வெளியுலகுக்கு தெரிய வந்தது. அன்று முதல் அக்குகை, குணா குகை என்று அழைக்கப்படுகிறது. குணாவில் இடம்பெறும், கண்மணி அன்போட… பாடல் காட்சி அங்கு வைத்துதான் எடுக்கப்பட்டது.

இந்தப் படத்தைப் பார்த்து குணா குகைக்கு சென்றவர்கள்தான் மஞ்சும்மல் பாய்ஸ். இந்த நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ். மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் மஞ்சும்மல் பாய்ஸ். தமிழ், தெலுங்கு , மலையாளம் என எல்லா மொழிகளிலும் சக்கை போடு போட்ட இப்படம் 200 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது. குணா படத்தின் கண்மணி அன்போடு… பாடலோடுதான் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் டைட்டில் தொடங்கும். குழிக்குள் விழுந்த நண்பனை மேலே மீட்டு வருகையில், மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல என்ற கமலின் குரல் ஒலிக்கும். குழிக்குள் விழுந்தவன் பிழைப்பானா, அவனை காப்பாற்ற முடியுமா என்று சீட்டின் நுனியில் அமர்ந்திருந்த ரசிகர்களுக்கு, குழிக்குள் விழுந்தவனை நண்பர்கள் மீட்கும் தருணம் உணர்ச்சிகரமானது. அந்த நேரத்தில் மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல என்ற பாடல்வரி ஒலித்து திரையரங்கிள் உள்ள ரசிகர்களின் உணர்ச்சியை உச்சத்திற்குக் கொண்டு சென்றது.

Also read… பிரபல நடிகை தான் இந்த சிறுமி… நீங்க கண்டுபிடிச்சீங்களா?

அந்த படத்திற்கு பிறகு சமூக வலைதளத்தில் அந்த பாடல் நண்பர்களுக்கான ஆந்தமாக மாறியது. அனைவரும் தங்களது நணபர்களுக்கு அந்த பாடலை டெடிகேட் செய்வது, ரீல்ஸ் போடுவது என சமூக வலைதளத்தின் உச்சத்திற்கு அந்த பாடல் சென்றது. இந்நிலையில் தற்போது மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் தான் இசையமைத்த பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக படத்தின் தயாரிப்பாளருக்கு இளையராஜா கடந்த மே மாதம் நோட்டீஸ் அனுப்பினார்.

சட்டப்பூர்வ நோட்டீஸ் கிடைத்ததும் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து பேசியிருந்தனர். இந்தநிலையில், இளையராஜா தரப்பு, மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இளையராஜா இழப்பீடாக கேட்ட 2 கோடி ரூபாயில், 60 லட்சம் ரூபாயை கொடுக்க படத்தின் தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டனர். இதனால் வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்கு செல்லாமல், பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?