5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ilayaraja: இளையராஜா சொன்ன குட் நியூஸ்.. 35 நாட்களில் சிம்ஃபனி .. ரசிகர்கள் ஹேப்பி!

மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை. நான் என் வழியில ரொம்ப கிளீயராக இருக்கேன் என இளையராஜா வீடியோ வெளியிட்டு விமர்சனங்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Ilayaraja: இளையராஜா சொன்ன குட் நியூஸ்.. 35 நாட்களில் சிம்ஃபனி .. ரசிகர்கள் ஹேப்பி!
இளையராஜா
intern
Tamil TV9 | Updated On: 25 Sep 2024 15:30 PM

80ஸ் மற்றும் 90ஸ் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்த இளைரயராஜா தனது இசையின் மூலம் பலரது உள்ளங்களை கொள்ளை கொண்டவர். இவரது படைப்புகள் அனைத்தும் இன்றளவும் மிகப்பெரிய வெற்றியை பெற்று நீடித்து நிற்கின்றன. இளையராஜாவின் மகன் இசையமைக்க வந்த பின்னரும் பிஸியான இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். அவரது குரலில் வெளிவந்த பாடல்களும் இசை ரசிகர்களுக்கு இன்றளவும் நினைவில் நிற்கிறது.

இசையமைப்பாளர் இளையராஜா சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய பாடல்களை சில நிறுவனங்கள் காப்புரிமை பெறாமல் பயன்படுத்தப்படுவதாக வழக்கு தொடர்ந்த நிலையில், மேலும், எஸ்.பி.பி பாடிய பாடல்களை இசை நிகழ்ச்சியில் பாட கூடாது என்றும் கூறி வந்தார். சமீபத்தில் வெளியான கூலி படத்தின் டீசரில் தனது இசையை பயன்படுத்தியதற்கு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிபதி “பாடல் வரிகள், பாடகர்கள் என அனைத்தும் சேர்ந்துதான் ஒரு பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும்போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?  என்று கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாடலாசிரியர் வைரமுத்து, இசை பெரியதா? பாடல் பெரியதா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். தொடர்ந்து இளைரயாஜா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், இசையா? பாடலா? என்ற கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

Also Read:நிமோனியா பாதிப்பிலும் சாதித்த மாணவர்… 10ஆம் வகுப்பு தேர்வில் 95% மதிப்பெண் பெற்று அசத்தல்!

சமீப காலமாக இசையமைப்பாளர் இளையராஜா குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சங்கள் எழுந்து வருகின்றன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 1.46 நிமிடம் ஒளிபரப்பாகும் அந்த வீடியோவில் இளையராஜா பேசியுள்ளதாவது,  எல்லோருக்கும்  வணக்கம். நான் தினமும் கேள்விப்படுகிறேன். என்னை பற்றிய செய்திகள் ஏதேனும் ஒரு வழியில் வந்து கொண்டிருப்பதாக வேண்டியவர்கள் சொல்லுவார்கள், நான் இதிலெல்லாம் கவனம் செலுத்துவதில்லை. அதே நேரத்தில் நான் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை.

என்னுடைய வேலையை கவனிப்பது தான் என் வேலை. நீங்கள் என்னை வாழ்த்து கொண்டிருக்கும் நேரத்தில் கடந்த ஒரு மாதத்தில் நான் ஒரு சிம்ஃபோனியை எழுதி முடித்து விட்டேன். இங்கே திரைப்பட பாடல்களும் எடுத்துவிட்டு, இடையில், சில இடங்களுக்கும், சில விழாக்களுக்கும் சென்று விட்டு இதெல்லாம் நடந்து கொண்டிருந்தாலும், ஒரு சிம்ஃபோனியை 35 நாட்களில் முழுவதுமாக, போர் மூமண்ட்ஸ் உள்ள அதாவது,சிம்ஃபோனி என்றால் அதை முழுவதுமாக எழுதி முடித்துவிட்டேன் என்ற சந்தோஷமான செய்தியை, எனக்கு சந்தோஷமான செய்தியை நான் உங்களுக்கு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

ஏனென்றால் பிலிம் மியூசிக் வேறு, பின்னணி மியூசிக் வேறு இதெல்லாம் அதில் இருந்தால் அது சிம்ஃபோனி கிடையாது. அதை ஓர் பியூர் சிம்ஃபோனியாக எழுதி முடித்திருக்கிறேன் என்ற மகிழ்ச்சியான செய்தியை, என்னுடைய ரசிகர்களுக்கு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Latest News