சட்டவிரோத ஐபிஎல் ஸ்ட்ரீமிங் – தமன்னாவுக்கு சைபர் கிரைம் போலீஸ் சம்மன்
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை சட்டவிரோதமாக ஃபேர்ப்ளே செயலியில் ஒளிப்பரப்பியது தொடர்பான வழக்கில் நடிகை தமன்னா பாட்டியாவிற்கு சைபர் கிரைம் போலீசாரால் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை சட்டவிரோதமாக ஃபேர்ப்ளே செயலியில் ஒளிப்பரப்பியது தொடர்பான வழக்கில் நடிகை தமன்னா பாட்டியாவிற்கு சைபர் கிரைம் போலீசாரால் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஐபிஎல் ஸ்ட்ரீமிங் உரிமையை வைத்திருக்கும் வயாகாம் குழுமம் FairPlay செயலிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அடுத்து மகாராஷ்டிரா சைபர் செல் ஒரு புகார் அளித்துள்ளது. அந்த புகாரில், 2023 ஆம் ஆண்டில் டாடா ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக்) ஐ ஃபேர்பிளே அங்கீகரிக்காமல் திரையிட்டதால் தங்களுக்கு ரூ. 100 கோடி இழப்பு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகள் ஃபேர்ப்ளே Fairplay என்ற மொபைல் ஆப்பில், கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்டது. பாலிவுட்டைச் சேர்ந்த நடிகர்கள், பாடகர்கள் பலரும் Fairplay ஆப்பை விளம்பரப்படுத்தியதோடு, இந்த ஆப்பில் போட்டிகளை காண மக்களை ஊக்குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாக ஐபிஎல் போட்டிகளின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு உரிமையை வைத்திருக்கும் வியகாம் 18 நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வழக்கில் பல்வேறு நட்சத்திரங்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில், இந்த வழக்கு விசாரணைக்காக வரும் 29ம் தேதி மும்பை சைபர் க்ரைம் முன் ஆஜராகும்படி நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே வழக்கில் ராப் பாடகர் பாட்ஷாவிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் சஞ்சய் தத்துக்கு மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் அந்த நாளில் தான் இந்தியாவில் இல்லை என்பதாலும், அவர் சஞ்சய் தத் அந்த சமயத்தில் துபாயில் இருந்ததாலும், இப்போது மீண்டும் சஞ்சய் தத்துக்கு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இப்போதும் மும்பையில் இல்லை எனக் கூறி அவரது தரப்பில் அவகாசம் கேட்டதால், அதற்கு பதிலாக தனது பதிலை பதிவு செய்ய மற்றொரு தேதியை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் ஏப்ரல் 29 ஆம் தேதி நடிகை தமன்னா பாட்டியாவை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.