5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Indian 2 Review: இந்தியன் 2 படம் எப்படி இருக்கு? ரசிகர்களை கவர்ந்ததா? திரை விமர்சனம் இதோ!

Indian 2: படத்தை காண திரையரங்கிற்கு ரசிகர்கள் காலை முதல் படையெடுத்து வருகின்றனர். அதே சமயம் நகர பகுதிகள் தவிர்த்து பிற பகுதிகளில் டிக்கெட் விற்பனை மந்தமாகவே உள்ளது. 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் பல பிரச்சனைகள் காரணமாக தாமதமாகி இன்று தியேட்டரில் ரீலீஸாகியுள்ளது.

Indian 2 Review:  இந்தியன் 2 படம் எப்படி இருக்கு? ரசிகர்களை கவர்ந்ததா? திரை விமர்சனம் இதோ!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 12 Jul 2024 12:49 PM

இந்தியன் 2 விமர்சனம்: நீண்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படம் இன்று உலகமெங்கும் தியேட்டரில் வெளியாகியுள்ளது. 28 ஆண்டுகளுக்குப் பின் உருவாகியுள்ள இப்படத்தின் 2 ஆம் பாகத்தையும் இயக்குநர் ஷங்கரே இயக்கியுள்ளார். இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்தி சிங், ப்ரியா பவானி சங்கர்,எஸ் ஜே சூர்யா, மனோபாலா, நெடுமுடி வேணு, மாரிமுத்து, சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக் என பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியது. 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் பல பிரச்சனைகள் காரணமாக தாமதமாகி இன்று தியேட்டரில் ரீலீஸாகியுள்ளது.

Also Read: OTT Movies: மகாராஜா முதல் ஹிட் லிஸ்ட் வரை.. இந்த வார ஓடிடி படங்கள் என்னென்ன?

இப்படத்தை காண திரையரங்கிற்கு ரசிகர்கள் காலை முதல் படையெடுத்து வருகின்றனர். அதே சமயம் நகர பகுதிகள் தவிர்த்து பிற பகுதிகளில் டிக்கெட் விற்பனை மந்தமாகவே உள்ளது. இந்தியன் 2 படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் சில பதிவுகளை காணலாம்.


ஒரு இணையவாசி,”இந்தியன் 2 படத்தின் முதல் பாதி ஓகே ரகம். சித்தார்த் தொடர்பான எமோஷனல் காட்சிகள் நன்றாக வந்துள்ளது. இந்தியன் தாத்தாவாக கமல் நிறைவாக தெரிகிறார்.அவர் வந்த பிறகே கதை சூடுபிடிக்கிறது. அனிருத்தின் பின்னணி இசை ஓகே. ஆனால் தாத்தா வாராரு பாடல் மாஸ்” என கூறியுள்ளார்.


இன்னொருவர், “கமல்ஹாசன் நடிப்பில் மிரட்டியுள்ளார்.ஆனால் இயக்குநர் ஷங்கர் தனது வழக்கமான ஸ்டைலில் இருந்து மிஸ்ஸாகி உள்ளார். சித்தார்த், ரகுல் நடிப்பு, அனிருத் இசை சிறப்பாக வந்துள்ளது” என கூறியுள்ளார்.

Also Read: TTF Vasan: சர்ச்சையில் சிக்கிய டிடிஃப் வாசன்.. இந்த முறை இப்படியா? வலுக்கும் கண்டனங்கள்..

இன்னொரு இணையவாசி, “இந்தியன் 2 சராசரிக்கும் குறைவான படம். எந்தக் கதையும் இல்லை, இது இந்தியன் 3 ஆம் பாகத்துக்காக வலிந்து உருவாக்கப்பட்டது போல தெரிகிறது” என விமர்சித்துள்ளார்

Latest News