5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

‘பென்ஸ்’ படத்தின் புதிய அப்டேட்.. வில்லனாகும் பிரபல நடிகர்!

Benz Movie Update : தமிழ்த் திரைப்பட பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். ஆரம்பத்தில் ஒருபடங்களை எடுத்துவந்த இவர் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார். இப்படத்தினை தொடர்ந்து பல படங்களை இயக்கியுள்ள இவர் தற்போது, கஜினியின் நடிப்பில் கூலி படத்தினை இயக்கி வருகிறார்.

‘பென்ஸ்’ படத்தின் புதிய அப்டேட்.. வில்லனாகும் பிரபல நடிகர்!
பென்ஸ் திரைப்படம் (Photo Credit: IMDb)
barath-murugan
Barath Murugan | Published: 11 Dec 2024 13:39 PM

தமிழ் சினிமாவில் ஆக்ஷ்ன் கதைகளுக்குப் பெயர்போனவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் இறுதியாக விஜய்யின் நடிப்பில் லியோ திரைப்படத்தினை இயங்கியிருந்தார். இப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றதை அடுத்ததாக தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் நடிப்பில் கூலி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் சென்னை மற்றும் கர்நாடகா பகுதிகளில் நடந்து வந்தநிலையில், தொடர்ந்து வட மாநிலங்களில் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. . இதன் காரணமாக 2 நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினி சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.

இதனைத் தொடர்ந்து இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துவரும் லோகேஷ் தயாரிப்பில் தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கவும் பென்ஸ் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தினை இயக்குநர் லோகேஷ் “எல்சியு” படத் தொகுப்பில் இணைக்க உள்ளார் என்று கூறிய நிலையில், இப்படத்தினை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். ராகவா லாரன்ஸ் முன்னணி நடிகராக நடிக்கும் இப்படத்திலிருந்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

பென்ஸ் திரைப்படத்தில் வில்லனாகக் களமிறங்கும் பிரபல நடிகர்

இந்நிலையில் ரெமோ திரைப்படத்தின் இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் உருவாக்கத்தில் இந்த பென்ஸ் திரைப்படம் தயாராகிவருகிறது. இப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஆக்ஷ்ன் கதாநாயகனாக நடித்துவரும் நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளராக இளம் பாடகர் சாய் அபயங்கரை லோகேஷ் அறிமுகம் செய்தார்.

இந்நிலையில் இவர்களைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகப் பிரபல நடிகர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் நடிகர் வேறு யாருமில்லை பிரபல நடிகர் மாதவன் தான்.

இதையும் படிங்க:நடிகர் அஜித் வெளியிட்ட பரபர அறிக்கை.. ரசிகர்களுக்கு சொன்ன அறிவுரையும், வேண்டுகோளும்!

நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் நடித்த மாதிரி மாதவனுக்கு இப்படத்தில் மாஸான கதாபாத்திரம் இருக்கிறது என்று கூறப்படுகிறது. தற்போது இயக்குநராகவும் பல படங்களை இயக்கிவரும் மாதவன் தற்போது இந்த திரைப்படத்தில் மாஸ் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராகவா லாரன்ஸின் பென்ஸ் திரைப்படம் உருவான கதை..

இயக்குநர் லோகேஷின் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் லியோ. நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா எனப் பலரும் நடித்திருந்த நிலையில், இப்படத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் சரி, விமர்சனங்கள் ரீதியாகவும் சரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படத்தினை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் ரஜினியின் கூலி படத்தினை இயக்கி வருகிறார்.

இயக்குநராக இருந்துவரும் லோகேஷின் தயாரிப்பில் வெளியான முதல் திரைப்படம் “ஃபைட் கிளப்”. இந்த திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று, வெற்றி பெற்றத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் தயாரிக்கவும் ஆரம்பித்தார் லோகேஷ்.

இதையும் படிங்க:‘மிஸ் யூ’ முதல் ‘சூது கவ்வும் 2’ வரை.. இந்த வார தியேட்டர் ரிலீஸ் படங்கள்!

இந்நிலையில் இயக்கத்தில் வெளியான படங்களை ஹாலிவுட் படங்களைப் போல் “எல்சியு” என்று தொகுத்து வருகிறார். அதில் கைதி, விக்ரம் மற்றும் லியோ போன்ற திரைப்படங்களை இணைந்துள்ளார். இதையடுத்ததாக தற்போது இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகிவரும் பென்ஸ் படத்தினையும் இணைக்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தனது நண்பரான ரத்னகுமார் முதலில் இயக்கவிருந்த நிலையில், பின் ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதை என்றால் சுவாரசியம் அதோடு கேமியோ ரோல் கண்டிப்பாக உண்டு என்று நமக்குத் தெரியும்.

அதைப்போல் விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா “ரோலெக்ஸ்” என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். அந்த கதாபாத்திரத்தைப் போல தற்போது லோகேஷ் தயாரிக்கும் பென்ஸ் திரைப்படத்தில் நடிகர் மாதவன் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துவருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் படங்கள் என்றாலே மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றநிலையில், இவர் த்யாரித்துவரும் பென்ஸ் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இதையும் படிங்க:‘ஜெயிலர் 2’ ரிலீஸ் அடுத்த வருஷமா..? மாஸ்டர் பிளான் போடும் இயக்குநர் நெல்சன்!

Latest News