Movie Search 2024 : 2024ல் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள்!
Most Searched Movies : 2024ம் வருடம் முடியவுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் சினிமாவில் அதிகம் ரசிக்கப்பட்ட பாடல்கள், அதிகம் வசூல் செய்த படங்கள் மற்றும் அதிகம் சம்பளம் பெற்ற நடிகர்கள் எனப் பல தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
ஸ்ட்ரீ 2 : இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது பிரபல இந்தி இயக்குநர் அமர் கெளஷிக் இயக்கத்தில் வெளியான ஸ்ட்ரீ 2. பிரபல நடிகை ஷ்ரத்தா கபூர் முன்னணி நாயகியாக நடித்த இந்த திரைப்படம் 2024ல் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த படமானது கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகியது. இந்தி மொழியை மையமாகக் கொண்டு வெளியான இப்படமானது நகைச்சுவை மற்றும் திகில் கதைக்களத்துடன் வெளியாகியது. 2018ம் ஆண்டு வெளியான ஸ்ட்ரீ பாகம் 1ன் தொடர்ச்சியாக உருவாக்கிய இப்படத்தினை மாடாக் பிலிம்ஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளது. சுமார் ரூ 126 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படமானது சுமார் ரூ 850 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்து பெரும் சாதனை படைத்துள்ளது.
கல்கி 2898ஏ.பி:
பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியான திரைப்படம் கல்கி 2898ஏபி. பிரபல தயாரிப்பு நிறுவனம் வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் நடிகர்கள் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி எனப் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர்.
சுமார் ரூ 600 பொருட்செலவில் உருவான இப்படம், சுமார் ரூ 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 2024ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட படங்களின் லிஸ்டில் 2வது இடத்தை இந்த கல்கி 2898ஏ.பி திரைப்படம் பிடித்துள்ளது.
இதையும் படிங்க:2024ம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய டாப் 5 நடிகைகளின் லிஸ்ட்!
12வது ஃபெயில் மற்றும் லாபட்டா லேடிஸ்:
இந்த பட்டியலில் 12வது ஃபெயில் திரைப்படம் 3வது இடத்தையும், லாபட்டா லேடிஸ் திரைப்படம் 4-வது இடத்தையும் பிடித்துள்ளது. பிரபல இந்தி திரைப்பட இயக்குநர் வினோத் சோப்ராவால் இயக்கப்பட்ட படம் 12வது ஃபெயில். இப்படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி மற்றும் மேதா சங்கர் எனப் பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். பயோ கிராபிக்ல் திரைப்படமாக அமைந்த இப்படம் சுமார் 20 கோடி செலவில் உருவாக்கிய இந்த திரைப்படம் சுமார் ரூ 70 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இந்த திரைப்படம் அதிகம் தேடப்பட்ட படங்களில் நான்காவது பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து நான்காவது இடத்தில் லாபட்டா லேடிஸ் திரைப்படம் உள்ளது. இந்தி இயக்குநர் கிரண் ராவ் இயக்கத்தில் வெளியான நகைச்சுவை திரைப்படமாகும் இப்படத்தில் நிதான்ஷி கோயல், பிரதிபா ரந்தா மற்றும் சாயா கடம் எனப் பலரும் நடித்திருந்தனர்.
ஹனு மேன்:
இதனைத் தொடர்ந்து இந்த பட்டியலில் 5-வது இடத்தை ஹனு மேன் திரைப்படம் பிடித்துள்ளது. பிரபல தெலுங்கு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் தேஜா சஜ்ஜா, அமிர்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார் மற்றும் சமுத்திரக்கனி எனப் பலரும் நடித்திருந்தனர்.
சூப்பர் ஹிரோ கதைக்களத்துடன் வெளியான திரைப்படம் வசூலில் சுமார் ரூ 350 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது. இப்படமானது 2024ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களில் 5-வது இடத்தை பிடித்துள்ளது.
இதையும் படிங்க:கோலிவுட்டில் 2024-ல் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடிய படங்களின் லிஸ்ட் இதோ
மகாராஜா :
இந்த பட்டியலில் தமிழ் மொழியில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் 6-வது இடத்தை பிடித்துள்ளது. இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவான இப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனம் திங் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.
நடிகர் விஜியஜ் சேதுபதி முன்னணி நாயகனாக நடித்த இப்படத்தில் , அபிராமி, திவ்யா பாரதி, நடராஜன், மம்தா மோகன்தாஸ் மற்றும் சாச்சனா எனப் பலரும் நடித்துள்ளார், குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் பல கோடிகள் வரை கலெக்ஷ்ன் செய்துள்ளது. 2024ம் ஆண்டு அதிக தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் தமிழ் சினிமாவில் முதல் திரைப்படமாக மகாராஜா படம் உள்ளது.
இதையும் படிங்க:2024-ல் சூப்பர் ஹிட் அடித்த மலையாள படங்கள் லிஸ்ட் இதோ!
மஞ்சுமெல் பாய்ஸ்:
மலையாள இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியான உண்மை சம்பவத்தின் அடிப்படையில் வெளியான இந்த படம் 2024ல் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் 7-வது இடத்தை பிடித்துள்ளது. குணா குகையில் நடந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய இப்படத்தில் சௌபின், ஷாஹிர், ஸ்ரீநாத் மற்றும் பாசி பாலு எனப் பலரும் நடித்திருந்தனர்.
சுமார் ரூ 20 கோடி பொருட்செலவில் வெளியான இப்படமானது உலகளாவிய வசூலில் ரூ 280 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் 2024ல் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் 7- வது இடத்தில் உள்ளது.
தி கோட் :
இந்த லிஸ்டில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ல் வெளியான தி கோட் திரைப்படம். இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இப்படத்தினை, பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் விஜயுடன், சினேகா, பிரசாந்த், பிரபு தேவா மற்றும் சிவகார்திகேய என பலரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் 2024ல் அதிகம் தேடப்பட்ட படங்களின் பட்டியலில் 8- வது இடத்தினை பிடித்துள்ளது.
சலார் மற்றும் ஆவேஷம் :
இந்த லிஸ்டில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் திரைப்படம் 9-வது இடத்திலும், மற்றும் பிரபல மலையாள நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேஷம் திரைப்படம் 10-வது இடத்தையும் பிடித்துள்ளது.