அடுத்த திருமணத்திற்கு தயாரான வனிதா விஜயகுமார்? பிக்பாஸ் பிரபலம்தான் மாப்பிள்ளையா
முதலில் நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு பிறகு விவாகரத்து பெற்றார். அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அதன் பிறகு ராஜன் என்பவரை திருமணம் செய்தார் அந்த திருமணத்தில் ஒரு மகள் உள்ளார். அதுவும் விவாகரத்தில் முடிந்தது. பிறகு நடன இயக்குநர் ராபர்ட்டுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அந்த காதலும் முடிவுக்கு வர கடைசியாக அவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கையும் சரியாக இல்லாததால் அதிலிருந்து வெளியே வந்தார்.
நடிகை வனிதா விஜயகுமார் அடுத்த திருமணத்திற்கு தயாராகியுள்ளதாகவும் அவர் பிரபல நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டரை திருமணம் செய்யவுள்ளதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வனிதா தெரிவித்துள்ளார். விஜயகுமாரின் மகளான வனிதா கோலிவுட்டில் சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர். விஜய்யுடன் சந்திரலேகா படத்திலும் நடித்தார். அதன் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் மூன்று திருமணங்களை செய்தார். ஆனால் அந்த திருமணங்கள் அனைத்துமே பிரிவில் முடிந்தன. இதற்கிடையே நடன அமைப்பாளர் ராபர்ட் மாஸ்டரை காதலித்தார். அந்தக் காதலும் பாதியில் முடிந்தது. இந்த நிலையில் பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்துள்ளனர். இதுகுறித்து வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் பிரபலம் கிடைக்கும் என பலர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் ஒரு போட்டியாளர் கலந்துகொண்டதன் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலம் ஆனது என்றால் அது வனிதா விஜயகுமார் தான். வனிதா பங்கேற்ற சீசன் அவரால் பெரிதும் பேசப்பட்ட சீசனாகவே இருந்தது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே வனிதா தனது குடும்ப பிரச்சனை காரணமாக மிகவும் பிரபலம் அடைந்திருந்தார். தனது தந்தை நடிகர் விஜயகுமார் மற்றும் தாய் நடிகை மஞ்சுளாவிடம் சொத்து பிரச்னையில் ஈடுபட்டபோது தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்டவராக மாறினார் வனிதா. அதுமட்டும் இன்றி தனது திருமண அறிவிப்புகள் மூலமாகவும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பிரபலமானவர் வனிதா. தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் வனிதா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆனார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் பிரபலம் ஆகிவிடலாம் என்ற விதியின்படி வனிதாவும் தமிழ்நாடு முழுக்க மேலும் ஃபேமஸ் ஆனார். பிக்பாஸ் டைட்டிலை அவர் வெல்லாவிட்டாலும் போட்டியிலிருந்து வெளியேறிய பிறகு படவாய்ப்புகள் குவிந்துவருகின்றன.
Also read… ரஜினியின் வேட்டையன் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? வெளியானது தகவல்
பிக்பாஸுக்கு சென்று வந்த பிறகு அவர் வசந்தபாலனின் அநீதி படத்தில் நடித்தார். அந்தப் படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. அதனையடுத்து பிரசாந்த் ஹீரோவாக ரீ எண்ட்ரி கொடுத்த அந்தகன் படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார் வனிதா விஜயகுமார். மேலும் அவரது நடிப்பில் சில படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன.
படங்கள் ஒருபுறம் இருக்க வனிதா விஜயகுமாரின் திருமண விவகாரம் சர்ச்சைகளை தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றது. முதலில் நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு பிறகு விவாகரத்து பெற்றார். அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அதன் பிறகு ராஜன் என்பவரை திருமணம் செய்தார் அந்த திருமணத்தில் ஒரு மகள் உள்ளார். அதுவும் விவாகரத்தில் முடிந்தது. பிறகு நடன இயக்குநர் ராபர்ட்டுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அந்த காதலும் முடிவுக்கு வர கடைசியாக அவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கையும் சரியாக இல்லாததால் அதிலிருந்து வெளியே வந்தார்.
Also read… தவறுதலாக தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட இந்தி நடிகர்.. என்ன நடந்தது?
சர்ச்சைகளுக்கு பெயர்போன இவர், இதுவரை இரண்டுக்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இவர் பிக்பாஸ் பிரபலம் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியிட்டுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்தான். இவர், பிக்பாஸ் 6வது சீசனில் கலந்து கொண்டார். இருவரும் கடற்கரையில் இருப்பது போலவும், Save The Date என்று அக்டோபர் 5ஆம் தேதியையும் குறிப்பிட்டிருக்கிறார் வனிதா.
ராபர்ட் மாஸ்டரும், வனிதா விஜயகுமாரும் சேர்ந்து மிஸ்டர் அன்ட் மிஸஸ் படத்தில் தற்போது நடித்துள்ளனர். இந்நிலையில் தான் அக்டோபர் 5ம் தேதி திருமணம் என்று இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வெளியிட்டுள்ளார் வனிதா. பீச் ஓரத்தில் வனிதா விஜயகுமார் ராபர்ட்டிற்கு மோதிரம் அணிவிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு `Save The Date’ எனக் குறிப்பிட்டு வருகிற 5ஆம் தேதி இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்பதை மறைமுகமாக அறிவித்திருக்கிறார்கள் என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தில் உள்ளவர்கள். இது எந்த அளவிற்கு உண்மை என்பது 5-ம் தேதிதான் தெரியவரும்.