தனுஷ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் ராஜ் கிரண்?
தனுஷ் மீண்டும் ஒரு படத்தை இயக்கி, நடிக்கிறார் என்றும், இதன் படப்பிடிப்பு தேனியில் தொடங்கி உள்ளதாகவும் சொல்கிறார்கள். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சீனியர் நடிகர்களான ராஜ் கிரண் மற்றும் சத்யராஜ் இருவரையும் தனுஷ் நேரில் சந்தித்து கதை கூறி நடிக்க சம்மதம் வாங்கியதாக கூறப்படுகிறது. முன்னதாக பவர் பாண்டி படத்தில் நடிகர் ராஜ் கிரணை தனுஷ் இயக்கி படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் வரும் இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் பவர் பாண்டி படத்திற்கு பிறகு மீண்டும் ராஜ் கிரண் நடிக்க உள்ளதாக கோலிவுட் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பது மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவராகவும் திகழ்கிறார். 2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி படத்தின் மூலம் தனுஷ் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் ராஜ் கிரண் மற்றும் ரேவதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். படம் வெளியாகியபோது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து நீண்ட காலங்கள் அவர் படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தாமல் இருந்த சூழலில் தற்போது மீண்டும் ராயன் படத்தின் மூலம் தனது இயக்குநர் வேலையை தொடங்கினார்.
இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், அபர்ணா பாலமுரளி என பலர் நடித்துள்ளனர். படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் தனுஷ் இதற்க்கு முன்பு எந்த படத்திலும், நடித்திராத கெட்டப்பான மொட்டை தலையுடன் நடித்துள்ளார். தனுஷின் 50-வது படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படம் கடந்த ஜூலை 26-ம் தேதி வெளியான நிலையில் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
சிறு வயதிலேயே தனது பெற்றோரை தொலைத்த தனுஷ் கிராமத்தில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாததை உணர்ந்து தனது இரண்டு தம்பிகள் மற்றும் தங்கையுடன் சென்னையை வந்தடைகிறார். அங்கு செல்வராகவனை சந்திக்கும் தனுஷ் அவருடைய உதவியால் வேலை, வீடு என தனது தம்பிகள், தங்கையை பார்த்துக்கொள்கிறார் தனுஷ். சிறு வயதிலேயே பெற்றோரை தொலைத்ததால் தனது தம்பிகள், தங்கைக்கு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து அவர்களை பாதுகாக்கிறார். அவர்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் அவர்களை காக்கும் அரணாக நிக்கிறார் தனுஷ்.
இந்த நிலையில் எதிர்பாராத விதமாக தனது முதல் தம்பி சந்தீப்கிஷன் அந்த ஏரியாவில் பெரிய தாதாவாக இருக்கும் சரவணனின் மகனை கொலை செய்து விடுகிறார். அந்த தாதாவிடம் இருந்து தனது தம்பி மற்றும் குடும்பத்தை எப்படி காப்பாற்றினார் தனுஷ். அதன் பிறகு என்ன எல்லாம் நடந்தது என்பதே படத்தின் கதை. குடும்பம், பாசம், துரோகம், பழிவாங்கல் என வழக்கமான டெம்ப்ளேட்டுகள் தான் படத்தின் கதை என்றாலும் அதனை சுவாரஸ்யமாக கடத்தியுள்ளார் இயக்குநர் தனுஷ். படத்தில் ’அடங்காத அசுரன்’ பாடலில் வரும் ‘உசுரே நீ தானே நீ தானே’ என்ற வரிகள் ஏ.ஆர்.ரகுமானின் குரலில் முன்னதாக வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த பாடல் காட்சியாக எப்படி இருக்கும் என்பதை திரையரங்கில் பார்க்க ரசிகர்கள் காத்திருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு செம்ம ட்ரீட் கொடுக்கும் வகையில் முக்கியமான இடத்தில் இந்த வரிகள் ஏ.ஆர்.ரகுமானின் குரலில் ஒலித்த போது திரையரங்கே அதிர்ந்தது. படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து தற்போது ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also read… ‘ஹேமா கமிட்டி’ தமிழ் திரைத் துறைக்கு தேவைப்படவில்லை – ஐஸ்வர்யா ராஜேஷ்
இந்த படத்தை தொடர்ந்து தற்போது தனுஷ் இயக்குநரகா நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இயக்குநர் தனுஷின் முற்றிலும் இளஞர்கள் நடிக்கும் இந்த படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான கோல்டன் ஸ்பாரோ பாடலும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து தனுஷ் மீண்டும் ஒரு படத்தை இயக்கி, நடிக்கிறார் என்றும், இதன் படப்பிடிப்பு தேனியில் தொடங்கி உள்ளதாகவும் சொல்கிறார்கள். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சீனியர் நடிகர்களான ராஜ் கிரண் மற்றும் சத்யராஜ் இருவரையும் தனுஷ் நேரில் சந்தித்து கதை கூறி நடிக்க சம்மதம் வாங்கியதாக கூறப்படுகிறது. முன்னதாக பவர் பாண்டி படத்தில் நடிகர் ராஜ் கிரணை தனுஷ் இயக்கி படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் வரும் இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.