5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

எஸ்டிஆர் 48லிருந்து விலகிய ராஜ்கமல் நிறுவனம்? தீயாய் பரவும் தகவல்!

STR 48 Movie: எஸ்டிஆர் 48 குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்துக்கான பட்ஜெட் நினைத்ததைவிடவும் அதிகமாக வாய்ப்பிருப்பதாக ராஜ்கமல் நிறுவனம் நினைப்பதால்; இதிலிருந்து வெளியேற அந்நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே எஸ்டிஆர் 48 படத்தை வேறு ஒரு நிறுவனம் தயாரிக்கும் முடிவில் இறங்கியிருப்பதாக கோலிவுட்டில் வட்டாரங்களில் தகவல்கள் தீயாய் பரவி வருகின்றது.

எஸ்டிஆர் 48லிருந்து விலகிய ராஜ்கமல் நிறுவனம்? தீயாய் பரவும் தகவல்!
எஸ்டிஆர் 48
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Jul 2024 12:35 PM

சிம்புவின் 48-வது படத்தினை தயாரிப்பதில் இருந்து ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் விலகியதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் தீயாய் பரவி வருகின்றது. இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு இறுதியாக நடித்து சூப்பர் ஹிட் அடித்தப் படம் ‘பத்து தல’. கடந்த 2017 ஆ,ம் ஆண்டு கன்னடத்தில் சிவ ராஜ்குமார், ஸ்ரீ முரளி நடிப்பில் வெளியான ’மஃப்டி’ படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்தப் படம். சிவ ராஜ்குமார் கேரக்டரில் சிம்புவின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தின் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த  படத்திற்கு பின் நடிகர் சிலம்பரசன், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்தப் படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. தேசிங்கு பெரியசாமி இயக்கம் என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எஸ்டிஆர் ரசிகர்களிடம் இருக்கிறது. இப்படத்துக்காக சிம்பு செம ஃபிட்னெஸ்ஸோடு இருக்கிறார். அதுமட்டுமின்றி மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட கலைகளையும் அவர் கற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதற்காக அவர் தாய்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

கமலின் ராஜ்கமல் நிறுவனம் இப்போது சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தை தயாரித்துள்ளது. அதைப் போல, சிம்பு, தேசிங்கு பெரியசாமி காம்பினேஷனிலும் ஒரு படத்தை அறிவித்தது. பட அறிவிப்பு வெளியாகி பல வாரங்கள் ஆனதால், இப்படம் மேற்கொண்டு வளராது என தகவல்கள் பரவின.

Also read… எனக்கு இப்படி ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கனும்… நடிகை சாய் பல்லவி விருப்பம்!

இந்நிலையில் எஸ்டிஆர் 48 குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்துக்கான பட்ஜெட் நினைத்ததைவிடவும் அதிகமாக வாய்ப்பிருப்பதாக ராஜ்கமல் நிறுவனம் நினைப்பதால்; இதிலிருந்து வெளியேற அந்நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே எஸ்டிஆர் 48 படத்தை வேறு ஒரு நிறுவனம் தயாரிக்கும் முடிவில் இறங்கியிருப்பதாக கோலிவுட்டில் வட்டாரங்களில் தகவல்கள் தீயாய் பரவி வருகின்றது.

இதற்கிடையே கமல் ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிம்பு. ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல் ஹாசனுடன் இருக்கும் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டானது. அதனைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

Latest News