பாலியல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்? இணையத்தில் கசிந்த தகவல்
சென்னை , மும்பை , ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு படப்பிடிப்பிற்கு சென்றபோது ஜானி மாஸ்டர் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். 18 வயது நிரம்பாத நிலையில் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அந்த பெண் கூறியதை அடுத்து ஜானி மாஸ்டர் மீது, பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தன் மீது உள்ள பாலியல் குற்றச்சாட்டை ஜானி மாஸ்டர் ஒப்புக்கொண்டதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றது. 2009-ஆம் ஆண்டு முதல் தெலுங்கு படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி வருகிறார் ஜானி. 2019ல் இவருடன் பணிப்புரிந்தபோது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 21 வயது இளம்பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின்பேரில் தெலங்கானா போலீசார் டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதனை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜானி மாஸ்டரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உப்பரப்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் ஜானி மாஸ்டர் தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2009-ஆம் ஆண்டு முதல் தெலுங்கு படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி வருகிறார் ஜானி. இவர் நடிகர் தனுஷ் நடித்த மாரி – 2 படத்தில் வெளியான ரவுடி பேபி பாடல் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதேபோல் விஜயின் ரஞ்சிதமே, தீ தளபதி, ஜாலியோ ஜிம்கானா, ஹல மித்தி ஹபி, தமன்னாவின் காவாலா பாடல்களுக்கும் நடன இயக்குநராக இருந்தவர் ஜானி. திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கருக்காதோ’ பாடலுக்காக தேசிய விருது பெற்றவர் நடன இயக்குநரான ஜானி மாஸ்டர்.
இந்த விருதிற்கு இவர் முழுக்க முழுக்க தகுதியானவர் என ரசிகர்கள் பாராட்டி வந்த நிலையில் தற்போது அதிர்ச்சியளிக்கும் வகையில் அவர் மீது 21 வயது பெண் பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார். 2019ல் இவருடன் பணிப்புரிந்தபோது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 21 வயது இளம்பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளதார். அதன்பேரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின்பேரில் தெலங்கானா போலீசார் டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது வழக்கு பதிந்துள்ளனர்.
கேரளா ஹேமா கமிட்டி அறிக்கையைத் தொடர்ந்து ஒட்டுமொத்த்த தென் இந்திய திரைப்படத்துறையே ஆட்டம் கண்டுள்ளது என்று சொல்லலாம். கேரளா மட்டுமல்லாமல் மற்ற திரையுலகிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக சில நடிகைகள் அடுத்தடுத்து புகார்களை முன்வைத்து வருகின்றனர். இதுவரை நடிகர்கள் ஜெயசூர்யா, சித்திக், இயக்குநர் ரஞ்சித் மற்றும் நடிகரும் எம்.எல்.ஏவுமான முகேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கிலும் அதே போல பாலியல் தொல்லைகள் அரங்கேறி வருவதாக நடிகை சமந்தா குரல் கொடுத்திருந்த நிலையில், ஜானி மாஸ்டர் மீது 21 வயது இளம் பெண் நடன இயக்குநர் பாலியல் தொல்லை புகார் அளித்த சம்பவர் பரபரப்பை கிளப்பியது. 2019ல் இவருடன் பணிப்புரிந்தபோது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 21 வயது இளம்பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளதார்.
Also read… ’வாழு வாழவிடு’… வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த ஜெயம் ரவி!
சென்னை , மும்பை , ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு படப்பிடிப்பிற்கு சென்றபோது ஜானி மாஸ்டர் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். 18 வயது நிரம்பாத நிலையில் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அந்த பெண் கூறியதை அடுத்து ஜானி மாஸ்டர் மீது, பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஜானி மாஸ்டரை தெலங்கானா காவல்துறையினர் பெங்களூருவில் வைத்து கைது செய்தனர். இதனை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்குப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜானி மாஸ்டரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உப்பரப்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஜானி மாஸ்டர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் , பாதிக்கப்பட்ட பெண் சிறுமியாக இருந்தபோது பாலியல் வன்முறையை செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஜானி மாஸ்டரின் மனைவி ஆயிஷா, “இதெல்லாம் எனது கணவர் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் செயல். அருவருக்கத்தகக் குற்றச்சாட்டு. திட்டமிட்ட சதி.பாதிக்கப்பட்டதாகக் கூறும் பெண்ணிடம் சரியான ஆதாரங்கள் இருக்கின்றனவா? அப்படி பலாத்காரம் செய்ததை நிரூபித்தால் நான் எனது கணவரை விட்டு விலக தயாராக இருக்கிறேன் என்று ஜானியின் மனைவி தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.