ஜெயம் ரவியின் JR 34 படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்டது படக்குழு!
Jayam Ravis JR 34: கடந்த 14-ம் தேதி இந்தப் படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கின. படப்பிடிப்பு நேற்று 16-ம் தேதி முதல் தொடங்கியது. இந்த நிலையில் படத்தின் பூஜை வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டது.
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள அவரின் 34-வது படத்தின் பூஜை வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், ‘காதலிக்க நேரமில்லை’ மற்றும் ‘ஜீனி’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் அவரது 34-வது படம் குறித்த தகவல்கள் சமீபத்தில் வெளியானது. அதன்படி இந்தப் படத்தை கவின் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘டாடா’ படத்தின் இயக்குநர் கணேஷ் பாபு இயக்குகிறார். ஸ்கிரீன் சீன் மீடியா சார்பில் சுந்தர் ஆறுமுகம் ஜெயம் ரவியின் 34-வது படமாக உருவாகும் இப்படத்தை தயாரிக்கிறார். பிரதர் படத்தை தொடர்ந்து இந்தப் படத்திற்கும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார். இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை தவ்தி ஜிவால் நடிக்கிறார்.
இயக்குநர் பி.வாசுவின் மகன் நடிகர் சக்தி இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் கடந்த 14-ம் தேதி இந்தப் படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கின. படப்பிடிப்பு நேற்று 16-ம் தேதி முதல் தொடங்கியது. இந்த நிலையில் படத்தின் பூஜை வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டது.
Lights, camera, action! 🎬#JR34 starring @actor_jayamravi Shoot in Progress 💫
Something special coming your way! ✨
Directed by @ganeshkbabu
Produced by @Screensceneoffl #SundarArumugam#DaudeeJiwal #Shakkthivasu @Ezhil_Dop @editorkathir @artdir_raja @MrRathna #Bakkiyam… pic.twitter.com/URXdMEQthI
— Screen Scene (@Screensceneoffl) December 16, 2024
மேலும் இயக்குநர் சுதா கொங்குரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள ‘புறநானூறு’ படத்தில் நடிகர் ஜெயம் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.
Also read… பழம்பெரும் நடிகரின் பயோபிக்கில் நடிக்கிறாரா தனுஷ்?
ஜெயம் ரவியின் நடிப்பில் குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் வெளிவந்த இறைவன், சைரன் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. இவரது நடிப்பில் இறுதியாக உருவன படம் பிரதர். இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
Also read… விடாமுயற்சி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? இணையத்தை கலக்கும் தகவல்
இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து நட்டி, பூமிகா, சரண்யா பொன்வன்னன், தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ், விடிவி கணேஷ், கூல் சுரேஷ் என பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை இயக்குநர் ராஜேஷ் இயக்கியிருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது குறிப்பிடதக்கது.