உடல் அமைப்பை வைத்து கிண்டல்… பிரபல நடிகையின் உருக்கமான பேச்சு!

Anna Reshma: நடிகை அன்னா ரேஷ்மா சமீபத்தில் தனது நடன வீடியோ ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.  பலரும் அவரது நடன அசைவுகளை பார்த்து கிண்டலாக விமர்சனங்களை வெளிப்படுத்தி வந்தனர். பலர் உருவ கேலியும் செய்திருந்தனர்.

உடல் அமைப்பை வைத்து கிண்டல்... பிரபல நடிகையின் உருக்கமான பேச்சு!

அன்னா ரேஷ்மா

Published: 

05 May 2024 11:49 AM

அங்கமாலி டைரீஸ் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் அன்னா ரேஷ்மா எனப்படும் லிச்சி.

இதனை தொடர்ந்து நடிகர் மோகன் லால் நடிப்பில் வெளியான வெளிப்பாடிண்டே புஸ்தகம் படத்தில் என்ற படத்தில் நடித்தார் அன்னா ரேஷ்மா. இந்த படத்தில் வந்து பட்டி தொட்டி எங்கும் பரவிய ‘ஜிமிக்கி கம்மல்’ என்ற பாடலில் ஆடியதன் மூலம் மலையாளம் மட்டுமின்றி மற்ற ரசிகர்களில் நெஞ்சங்களிலும் இடம் பிடித்தார் அன்னா ரேஷ்மா.

அதனை தொடர்ந்து பிரித்விராஜ் மற்றும் பிஜூ மேனன் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ஐயப்பனும் கோஷியும் படத்தில் நடித்திருந்தார் அன்னா ரேஷ்மா. இவர் இந்த படத்தில் பிரித்விராஜின் மனைவியாக குறைந்த சீன்களில் மட்டும் நடித்திருந்தாலும் இவரது நடிப்பு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

Also read… குக் வித் கோமாளி சீசன் 5: வெளியேறிய முக்கிய பிரபலம்… வைரலாகும் போஸ்ட்!

தொடர்ந்து மோலிவுட் சினிமாவில் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகை அன்னா ரேஷ்மா பெரிய அளவில் சினிமாவில் நடிக்கவில்லை. இதற்கு அவர் உடல் எடை அதிகரித்ததே காரணம் என சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகை அன்னா ரேஷ்மா சமீபத்தில் தனது நடன வீடியோ ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.  பலரும் அவரது நடன அசைவுகளை பார்த்து கிண்டலாக விமர்சனங்களை வெளிப்படுத்தி வந்தனர். பலர் உருவ கேலியும் செய்திருந்தனர்.

இது குறித்து மனம் உடைந்து பேசிய நடிகை அன்னா ரேஷ்மா, சமீபகாலமாக நான் நோயால் அவதிப்பட்டு வருகிறேன். சில நேரங்களில் உடல் எடை தானாகவே கூடுகிறது.அதன் பின் தானாகவே உடல் மெலிந்து விடுகிறது. என்னை உடல் ரீதியாக என்னை யாரும் விமர்சிக்க வேண்டாம். நடனம் பிடித்து இருந்தால் பாருங்கள் இல்லை என்றால் கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என்று அன்னா ரேஷ்மா ராஜன் கூறியுள்ளார்.

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?