Hema Committee Report : நிர்வாண காட்சிகள்.. இரவு நேர தொந்தரவு.. மலையாள சினிமாவை புரட்டிப்போட்ட அறிக்கை.. ஷாக்கில் திரையுலகம்!
பல நடிகைகளும் எதிர்கால பயத்தால் புகார் அளிக்கவில்லை, சிலர் திரையுலகை விட்டு ஒதுங்கிவிட்டனர் எனவும் கூறப்படுகிறது. மேலும் பாலியல் தேவைகளுக்கு இணங்காதவர்களை முத்திரை குத்தி சினிமாவில் இருந்து நீக்குகின்றனர் என்றும் அதையும் மீறி புகார் அளிப்பவர்களும் சினிமாவில் இருந்து நீக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நடிகைகளை நிர்வாண காட்சிகள் நடிக்க வற்புறுத்துதல், படப்பிடிப்பின் போது இரவு நேரத்தில் தொந்தரவு அளித்தல் என மலையாள சினிமாவை புரட்டிப்போட்டுள்ளது ஹேமா கமிட்டி அறிக்கை. மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை ஆய்வு செய்து, 2019 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழுவான நீதிபதி ஹேமா குழுவினர் அறிக்கையை சமர்பித்தனர். இந்த அறிக்கையின் நகல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது. இந்த கமிஷன் கடந்த 2019-ம் ஆண்டே அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. ஆனால் அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. இதற்கு மலையாள சினிமா உலகில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கிட்டத்தட்ட 51 பேரின் வாக்குமூலத்தின்படி இந்த அறிக்கை தயாரானது.
கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் அத்துமீறல் செய்யப்பட்டார். இந்த சம்பவம் திரையுலகினரை அதிர வைத்தது. பின்னர் நடத்திய விசாரணையில் நடிகர் திலீப் தூண்டுதலின் பேரில் இந்த பலாத்கார சம்பவம் நடந்தது என்று வெளியான தகவல் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை ஆய்வு செய்து, 2019 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழுவான நீதிபதி ஹேமா குழுவினர் அறிக்கையை சமர்பித்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிக்கையான இது, அரசாங்கத்தால் முடக்கப்பட்டு வைக்கப்பட்டது.
இந்த அறிக்கையின் நகல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது. 235 பக்கம் கொண்ட அறிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன. சினிமாவில் அட்ஜஸ்ட் செய்து கொண்டு, சமரசம் செய்து கொண்டு இருக்க வேண்டும் என தங்களிடம் சொல்லப்பட்டதாக பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மலையாள திரையுலகில் வாய்ப்புகளைப் பெற பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுகிறார்கள் என்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகில் வாய்ப்புகளைப் பெற பல முறை பாலியல் ரீதியான சுரண்டல்கள் நடைபெறுவதாகவும், ஆபத்தான சூழல் நிலவுவதாகவும் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
Also read… Actress Sangeetha: தமிழ் சினிமாவை விட தெலுங்கு பெட்டர்.. கடுப்பான நடிகை சங்கீதா!
தங்களின் வலைகளில் நடிகைகளை விழவைக்க முத்தம், நிர்வாணம் போன்ற காட்சிகளை ஏற்படுத்தி, அதன் வாயிலாக நடிகைகளை மிரட்டுவது, கட்டாயப்படுத்துவது போன்றவற்றையும் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. பல நடிகைகளும் எதிர்கால பயத்தால் புகார் அளிக்கவில்லை, சிலர் திரையுலகை விட்டு ஒதுங்கிவிட்டனர் எனவும் கூறப்படுகிறது. மேலும் பாலியல் தேவைகளுக்கு இணங்காதவர்களை முத்திரை குத்தி சினிமாவில் இருந்து நீக்குகின்றனர் என்றும் அதையும் மீறி புகார் அளிப்பவர்களும் சினிமாவில் இருந்து நீக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நிர்வாணமாக நடிக்க நடிகைகளுக்கு மேலிடத்தில் இருந்து நெருக்கடி உள்ளது. இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் அவ்வாறு நடிக்க சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர் என்பன போன்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களும் ஹேமா கமிட்டி அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இந்தியா முழுவதும் சினிமா எப்படி எடுக்க வேண்டும் என்று மலையாள சினிமாவைப் பார்த்து கத்துக்க வேண்டும் என்று கூறிவந்த நிலையில் தற்போது பாலியல் புகார்கள் அடுக்கடுக்கடுக்காக குவிந்து வருவது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.