5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கல்கி 2898 AD ட்ரெய்லர் காப்பியா? ஆதாரத்துடன் புகார் கூறிய நபர் – ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

Kalki 2898 AD: வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் உருவாகிறது. அறிவியல் புனைவு திரைப்படமான இதில் பிரபாஸின் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் கதை 6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களை பேசுவதாக இயக்குநர் நாக் அஸ்வின் கூறியிருந்தார். படம் ரூ.600 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகிறது. ஒரே நேரத்தில் இந்தியிலும், தெலுங்கிலும் படமாக்கப்பட்டு வருகிறது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

கல்கி 2898 AD ட்ரெய்லர் காப்பியா? ஆதாரத்துடன் புகார் கூறிய நபர் – ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
கல்கி 2898 AD
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Jun 2024 16:41 PM

கல்கி 2898 AD படத்தின் ட்ரெய்லரில் காட்டப்பட்ட இடம் ஏற்கனவே 10 வருடங்களுக்கு முன் வந்த ஒரு ஆர்ட் தான் என ஆதாரத்துடன் அதை உருவாக்கியவர் புகார் கூறி இருக்கின்றார். இதனை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். பாகுபலி படங்களின் பிரம்மாண்ட வெற்றி தொடர்ந்து தெலுங்கு நடிகர் பிரபாஸ் பான் இந்தியா நட்சத்திரமாக மாறினார். பாகுபலி படத்திற்கு பின்னர் வெளிவந்த சாஹோ, ராதே ஷ்யாம் படங்கள் தோல்வியை சந்தித்தன. அதன் பின்னர் வெளிவந்த ஆதிபுரூஷ் திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதனை தொடர்ந்து கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான சலார் திரைப்படம் பிரபாஸிற்கு ரசிகர்களிடையே கவனத்தை கொடுத்தது. இந்நிலையில் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் ‘கல்கி 2898 ஏ.டி’.

இந்த நிலையில் மிகப்பெரிய பொருட்செலவில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடிக்கும் கல்கி திரைப்படம் முழு வீச்சில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கோலிவுட் நடிகர் பசுபதி, திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் உருவாகிறது. அறிவியல் புனைவு திரைப்படமான இதில் பிரபாஸின் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் கதை 6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களை பேசுவதாக இயக்குநர் நாக் அஸ்வின் கூறியிருந்தார். படம் ரூ.600 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகிறது. ஒரே நேரத்தில் இந்தியிலும், தெலுங்கிலும் படமாக்கப்பட்டு வருகிறது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Also read… “120 ரூபாயில் கோபுரம் கட்டப்போவதில்லை” – சர்ச்சையில் சிக்கிய எம்.எஸ்.பாஸ்கர்!

முன்னதாகவே இந்தப் படம் முழுக்க முழுக்க இந்த திரைப்படம் டூன் என்ற திரைப்படத்தின் காப்பி என கூறி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து விஷ்ணு பகவானின் கடைசி அவதாரமான கல்கி அவதாரத்தை வித்தியாசமாக எடுக்கிறேன் என்ற பெயரில் ஏதோ ஹாலிவுட் திரைப்படத்தின் ரீமேக்கை எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு கடந்த 10-ம் தேதி வெளியிட்டது. படம் வருகின்ற 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கல்கி 2898 AD படத்தின் ட்ரெய்லரில் காட்டப்பட்ட இடம் ஏற்கனவே 10 வருடங்களுக்கு முன் வந்த ஒரு ஆர்ட் தான் என ஆதாரத்துடன் அதை உருவாக்கியவர் புகார் கூறி இருக்கின்றார். இதனால் கல்கி 2898 AD படம் இணையத்தில் ட்ரோல்களுக்கு உள்ளாகி இருக்கிறது.

Latest News