பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? - Tamil News | Kalki 2898 AD Movie box office collection day 1 | TV9 Tamil

பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Published: 

28 Jun 2024 07:17 AM

Kalki 2898 AD Movie: அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, பசுபதி, திஷா பதானி, அன்னா பென் உள்ள பலர் நடித்துள்ளனர். மகாபாரதத்தையும், கல்கி அவதாரத்தையும் கலந்து கட்டி ஒரு புதுக்கதையை நாக் அஸ்வின் ஹாலிவுட் ஸ்டைலில் கொடுத்திருக்கும் படம் தான் கல்கி 2898 ஏடி. இந்த படமே வெறும் அறிமுகம் தான். அடுத்த பாகத்தில் தான் கல்கி அவதாரமே வரும் என படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரபாஸின் கல்கி 2898 ஏடி படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

பிரபாஸின் கல்கி 2898 ஏடி

Follow Us On

நடிகர் பிரபாஸின் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. பாகுபலி படங்களின் பிரம்மாண்ட வெற்றி தொடர்ந்து தெலுங்கு நடிகர் பிரபாஸ் பான் இந்தியா நட்சத்திரமாக மாறினார். பாகுபலி படத்திற்கு பின்னர் வெளிவந்த சாஹோ, ராதே ஷ்யாம் படங்கள் தோல்வியை சந்தித்தன. அதன் பின்னர் வெளிவந்த ஆதிபுரூஷ் திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதனை தொடர்ந்து கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான சலார் திரைப்படம் பிரபாஸிற்கு ரசிகர்களிடையே கவனத்தை கொடுத்தது. இந்நிலையில் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் ‘கல்கி 2898 ஏ.டி’. இந்தப் படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் உருவானது. அறிவியல் புனைவு திரைப்படமான இதில் பிரபாஸின் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் கதை 6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களை பேசுவதாக இயக்குநர் நாக் அஸ்வின் கூறியிருந்தார். படம் ரூ.600 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவானது. ஒரே நேரத்தில் இந்தியிலும், தெலுங்கிலும் படமாக்கப்பட்ட இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Also read… இணையத்தில் வைரலாகும் தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘ராயன்’ படத்தின் புதிய போஸ்டர்

இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, பசுபதி, திஷா பதானி, அன்னா பென் உள்ள பலர் நடித்துள்ளனர். மகாபாரதத்தையும், கல்கி அவதாரத்தையும் கலந்து கட்டி ஒரு புதுக்கதையை நாக் அஸ்வின் ஹாலிவுட் ஸ்டைலில் கொடுத்திருக்கும் படம் தான் கல்கி 2898 ஏடி. இந்த படமே வெறும் அறிமுகம் தான். அடுத்த பாகத்தில் தான் கல்கி அவதாரமே வரும் என படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கல்கி 2898ஏடி படம் அருமை. பிரபாஸின் நடிப்பு சிறப்பு. அமிதாப் பச்சன், கமல் ஹாசன் தீயாக நடித்திருக்கிறார். இந்திய சினிமாவில் மறக்க முடியாத படமாக இருக்கிறது எனவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று உலகம் முழுவதும் வெளியான கல்கி படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகின்றது. அந்த வகையில் படம் சினிமா விமர்சகர்களின் கருத்துப்படி, கல்கி 2898 AD பாக்ஸ் ஆபிஸ் முதல் நாள் வசூல் உலகளவில் அதன் முதல் நாளில் ரூ 200 கோடியும், முதல் வார இறுதியில் ரூ 500 கோடியும் வசூலிக்கலாம். படம் அதை அடைய முடிந்தால், அது 2024 இல் ஒரு சாதனையாக இருக்கும், மேலும் பிரபாஸுக்கு மற்றொரு பெரிய தொடக்கமாக இருக்கும். இந்தியாவில் இப்படம் முதல் நாளில் ரூ.120-140 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024ல் வேறு எந்தப் படமும் அதைச் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால் இன்னும் இதுவரை அதீகரப்பூர்வ வசூல் நிலவரம் வெளியாகவில்லை. படக்குழு அறிவித்தால் மட்டுமே உண்மையான நிலவரம் தெரியவரும்.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version