’கல்கி 2898 AD’ படத்திற்காக கமல் டப்பிங் பேசிய மொழிகள் எத்தனை தெரியுமா?
Kalki 2898 AD: பிரபாஸ், 'கல்கி படத்தில் நடிப்பதற்கு கமல் சார் ஒரு வருடம் யோசித்தார். அவரை டார்ச்சர் செய்ய வேண்டாம் என்று நான் சொல்லிவிட்டேன்' என்றார். இதனையடுத்து பேசிய கமல் ஹாசன், "டார்ச்சர் எல்லாம் இல்லை. என் மீது சந்தேகம் எனக்கே இருந்தது. அமிதாப் நடித்திருக்கிறார் பிரபாஸ் நடித்திருக்கிறார். அப்படி இருக்கும்போது நான் என்ன செய்யப்போகிறேன் என்பதே அதற்கு காரணம். இதற்கு முன்பு நான் கெட்டவனாக நடித்ததே இல்லை என்று சொல்லவில்லை. கெட்ட ஹீரோ, சைக்கோ உள்ளிட்ட கேரக்டர்களை செய்திருக்கிறேன். ஆனால் இது வேறு மாதிரியானது" என்றார்.
பிரபாஸ் நாயகனாக நடித்துள்ள ’கல்கி 2898 AD’ படத்திற்காக கமல் டப்பிங் பேசிய மொழிகள் எண்ணிக்கை குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர்கள் அமிதாப்பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’. இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடித்திருக்கிறார். பான் இந்திய படமாக நாளை வெளியாக உள்ளது. பாகுபலி படங்களின் பிரம்மாண்ட வெற்றி தொடர்ந்து தெலுங்கு நடிகர் பிரபாஸ் பான் இந்தியா நட்சத்திரமாக மாறினார். பாகுபலி படத்திற்கு பின்னர் வெளிவந்த சாஹோ, ராதே ஷ்யாம் படங்கள் தோல்வியை சந்தித்தன. அதன் பின்னர் வெளிவந்த ஆதிபுரூஷ் திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதனை தொடர்ந்து கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான சலார் திரைப்படம் பிரபாஸிற்கு ரசிகர்களிடையே கவனத்தை கொடுத்தது.
வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் உருவாகிறது. அறிவியல் புனைவு திரைப்படமான இதில் பிரபாஸின் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் கதை 6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களை பேசுவதாக இயக்குநர் நாக் அஸ்வின் கூறியிருந்தார். படம் ரூ.600 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகிறது. ஒரே நேரத்தில் இந்தியிலும், தெலுங்கிலும் படமாக்கப்பட்டு வருகிறது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த நிலையில் மிகப்பெரிய பொருட்செலவில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடிக்கும் கல்கி திரைப்படம் முழு வீச்சில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கோலிவுட் நடிகர் பசுபதி, திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
Also read… ஓடிடியில் அடுத்தடுத்து வெளியாகும் மலையாள ஸ்டார்களின் படங்கள் லிஸ்ட்!
இந்நிலையில் சமீபத்தில் கல்கி படத்தின் ப்ரோமோஷனில் பேசிய பிரபாஸ், ‘கல்கி படத்தில் நடிப்பதற்கு கமல் சார் ஒரு வருடம் யோசித்தார். அவரை டார்ச்சர் செய்ய வேண்டாம் என்று நான் சொல்லிவிட்டேன்’ என்றார். இதனையடுத்து பேசிய கமல் ஹாசன், “டார்ச்சர் எல்லாம் இல்லை. என் மீது சந்தேகம் எனக்கே இருந்தது. அமிதாப் நடித்திருக்கிறார் பிரபாஸ் நடித்திருக்கிறார். அப்படி இருக்கும்போது நான் என்ன செய்யப்போகிறேன் என்பதே அதற்கு காரணம். இதற்கு முன்பு நான் கெட்டவனாக நடித்ததே இல்லை என்று சொல்லவில்லை. கெட்ட ஹீரோ, சைக்கோ உள்ளிட்ட கேரக்டர்களை செய்திருக்கிறேன். ஆனால் இது வேறு மாதிரியானது” என்றார்.
இதனை தொடர்ந்து தற்போது கல்கி படத்திற்காக கமல் எத்தனை மொழிகளில் டப்பிங் பேசியுள்ளார் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் 5 மொழிகளில் டப்பிங் பேசியுள்ளார். இப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. மேலும், கமல் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படமும் அடுத்த மாதம் 12-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.