5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நிறைவடைந்தது ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு

தக் லைஃப் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், மொத்த படத்திற்கான படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து, டப்பிங், எடிட்டிங் உள்ளி போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை படக்குழு தீவிரப் படுத்தியுள்ளது.

நிறைவடைந்தது ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு
தக் லைஃப்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Sep 2024 17:57 PM

உலக நாயகன் கமல் ஹாசன் நடிபில் ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நாயகனாக நடித்து வரும் படம் ‘தக் லைஃப்’. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ் இந்தி நடிகர் அலிஃபஸல், அபிராமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்து வருகின்றன. இந்தப் படத்தின் படப்பிடிப்பினை ஒரே கட்டமாக ஒட்டுமொத்தமாக முடித்துவிட்டது படக்குழு. படப்பிடிப்பு தொடங்கப்பட்ட சமயத்தில் தேதிகள் குளறுபடியால் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் விலகி விட்டார்கள். அதற்கு பின்பு சிம்பு இணைந்து ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள். இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் அவருக்கு கை கொடுத்தது, நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இந்த படத்தில் கமல்ஹாசன் ஸ்கோர் செய்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அவர் கமிட்டாகி பிஸியாகி உள்ளார். தன்னுடைய நடிப்பு கமிட்மெண்ட்களால் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் அவர் தவிர்த்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் -மணிரத்னம் கூட்டணியில் 30 ஆண்டுகளை கடந்து உருவாகி வரும் படம் தக் லைஃப். இந்த படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்ட நிலையில் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக படக்குழு சார்பில் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன், பொன்னின் செல்வன் 2 என்ற அடுத்தடுத்த படங்கள் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் கொடுத்தது. மேலும் விருதுகளையும் அளித்த நிலையில், இவர் அடுத்ததாக நடிகர் கமல் ஹாசனை வைத்து இயக்கும் தக் லைஃப் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு ரசிகர்களிடமிருந்து வந்த வண்ணமாக உள்ளது.

Also read… Lubber Pandhu Movie Review : ஒவ்வொரு சீனும் சிக்சரு… லப்பர் பந்து விமர்சனம் இதோ!

தக் லைஃப் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், மொத்த படத்திற்கான படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து, டப்பிங், எடிட்டிங் உள்ளி போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை படக்குழு தீவிரப் படுத்தியுள்ளது. முன்னதாக படத்தின் டப்பிங் பணிகளை கமல், சிம்பு உள்ளிட்டவர்கள் மேற்கொண்டதையும் பார்க்க முடிந்தது. படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தக் லைஃப் படத்தில் கமல் ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு நடிப்பதாகவும், சிம்புவின் ஜோடியாக திரிஷா நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, படத்தில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக யாரும் இல்லை எனவும் தெரிகிறது. இதையடுத்து அபிராமி, வையாபுரி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களை ஏற்று நடிக்கின்றனர்.

இப்போது படப்பிடிப்பை முடித்துவிட்ட கையுடன், படத்தின் டிஜிட்டல் உரிமையையும் விற்றுவிட்டது படக்குழு. இதனை உரிமையினை 149.7 கோடி ரூபாய்க்கு கைப்பற்றப்பட்டு இருக்கிறது. இது தமிழ் படங்களில் அதிக விலைக்குப் போன டிஜிட்டல் உரிமை என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்புக்கு முன்னதாகவே இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் மிகப் பெரிய அளவில் விலை போய் உள்ளது. இதனால் படக்குழுவினர் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர்.

Latest News