5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cinema Rewind: ‘என் சினிமா வளர்ச்சிக்கு ரஜினியும் காரணம்’ – கமல்ஹாசன் பகிர்ந்த விஷயம்.. மீள்பார்வை!

Kamal about Rajini: சினிமா துறையில் 50 வருடங்களை கடந்தும் நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் இருவருமே தங்களது மாஸ் குறையாமல் இளம் நடிகர்களுடன் போட்டிப் போட்டு தங்களது இடத்தை யாருக்கும் கொடுக்க மாட்டோம் என்று நடித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினி தற்போது இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க உள்ளார். 70 வயதை கடந்தும் தனது நடிப்பிற்கு ஓய்வு கொடுக்காமல் நடித்து வருகிறார் ரஜினி.

Cinema Rewind: ‘என் சினிமா வளர்ச்சிக்கு ரஜினியும் காரணம்’ – கமல்ஹாசன் பகிர்ந்த விஷயம்.. மீள்பார்வை!
கமல் – ரஜினி
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 26 Jun 2024 16:48 PM

‘என் சினிமா வளர்ச்சிக்கு ரஜினியும் காரணம்’ என்று நடிகர் கமல்ஹாசன் சில ஆண்டுகளுக்கு முன்னர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் முந்தைய காலத்தில் இருந்தே நடிகர்களிடையே போட்டி நிலவுவது வழக்கம். நடிகர்களுக்குள் இருக்கோ இல்லையோ அவர்களது ரசிகர்களுக்குள் அந்த போட்டி அதிகமாகவே இருந்தது. எம்.ஜி.ஆர் – சிவாஜி தொடங்கி, ரஜினி – கமல், அஜித் – விஜய், சிம்பு – தனுஷ் என இந்த போட்டி தொடந்து கொண்டே இருக்கிறது. யார் சிறந்த நடிகர்கள் என்ற சண்டை நடிகர்களுக்குள் வருவதை விட யார் சிறந்த நடிகர்கள் என்ற சண்டை அவர்களின் ரசிகர்களிடையே தான் அதிகமாக காணப்பட்டது. இணையதள பயன்பாடு குறைவாக இருந்த காலத்தில் இந்த சண்டைகளும் குறைவாகவே இருந்தது. இணையதள பயன்பாடு அதிகரித்தப்பின் யார் பெரிய ஆள் என்று அடித்துக்காட்டு என்பது போல இணையதள போர்கள் அவ்வப்போது நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

சினிமா துறையில் 50 வருடங்களை கடந்தும் நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் இருவருமே தங்களது மாஸ் குறையாமல் இளம் நடிகர்களுடன் போட்டிப் போட்டு தங்களது இடத்தை யாருக்கும் கொடுக்க மாட்டோம் என்று நடித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினி தற்போது இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க உள்ளார். 70 வயதை கடந்தும் தனது நடிப்பிற்கு ஓய்வு கொடுக்காமல் நடித்து வருகிறார் ரஜினி.

Also read… Amazon Prime OTT : கல கல காமெடி.. அமேசான் பிரைமில் தவறவிடக்கூடாத டாப் 10 நகைச்சுவை படங்கள்!

இதற்கு சற்றும் குறைந்தவன் நான் இல்லை என்பது போல கமல் வரிசையாக படங்களை தனது கைவசம் வைத்துள்ளார். அதன்படி பிரபாஸ் முன்னணி நாயகனாக நடிக்கும் கல்கி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் கமல் நடித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்துள்ளார் கமல். இந்தப் படமும் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இன்று மாலை படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிடுகின்றது.

இளம் நடிகர்களுக்கு போட்டியாக தொடர்ந்து படங்களை வெளியிட்டு வருகின்றனர் கமலும் ரஜினியும். இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல், ‘என் சினிமா வளர்ச்சிக்கு ரஜினியும் காரணம்’ என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் போட்டி என்பது எங்களுக்குள் கிடையாது. தனிப்பட்ட முறையில் நாங்கள் சகோதரர்களாகவே இருக்கிறோம். தொழில் போட்டி என்பது கண்டிபாக இருக்க வேண்டும். அப்படி இருப்பதால் மட்டுமே தாங்கள் அந்த துறையில் நிலைத்து இருக்க முடியும் என்று அவர் பேசியது வைரலாகி வருகின்றது.

Latest News