5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்

கங்குவா திரைப்படம் முதலில் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தனர். ஆனால் அதே தேதியில் ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படம் வெளியாவதால் கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. இத்திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 'கங்குவா' படத்தின் புரொமோஷன் பணிகளை அடுத்த வாரத்தில் இருந்து தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்
கங்குவா
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 04 Oct 2024 18:46 PM

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கங்குவா மற்றும் சூர்யா 44 என இரண்டு படங்களிலும் பிசியாக வேலை செய்து வருகிறார் சூர்யா. கிட்டதட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து பெரும் பொருட்செலவில் கங்குவா படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், கோவை சரளா, யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி, நடராஜன் சுப்பிரமணியன், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருகின்றனர். சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கங்குவா. இந்த படத்தினை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்குகின்றார். மன்னர் காலக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படம்தான் சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் படம். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் கங்குவா படத்தின் ட்ரெய்லர் கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி வெளியாகியுள்ளது. ட்ரெய்லரில் பீரியட் காலத்தில் நடக்கும் சண்டை காட்சிகளும், சாகச காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. தீவு, மர்மம் என பின்னணி குரலுடன் தொடங்கும் ட்ரெய்லர் பிரம்மாண்டத்தின் காட்சியாக விரிகிறது. வித்தியாசமான தோற்றத்தில் சூர்யா தோன்றுகிறார். அதே சமயம் டிரெய்லரின் இறுதி காட்சியில் ஒருவர் மண்டை ஓடுகள் அடங்கிய மாலையை வீசியபடி குதிரையில் வருவது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த குதிரையில் வரும் நபரை பார்த்து சூர்யா தனது உதட்டோரம் ஒரு சிரிப்பை காட்டுவது அந்த வீடியோவில் தெரிகிறது. அது யார் என்று காட்டப்படவில்லை என்றாலும் அது சூர்யாவின் சகோதரரும் நடிகருமான கார்த்தியாக இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர். முன்னதாக கார்த்தி இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வந்ததால் அது கார்த்தி என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.

Also read… “உன் அப்பா என்பதில் பெருமையாக உள்ளது”… மகள் குறித்து நடிகர் சூர்யா நெகிழ்ச்சி!

இந்தப் படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் படம் எடுக்கப்பட்டு வருகிறது.  13 விதமான தோற்றங்களில் சூர்யா நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படம் கடந்த பொங்கலுக்கே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டதால், படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் போனது.

Also read… கார்த்தியின் ’மெய்யழகன்’ படத்திலிருந்து வெளியானது ‘ஊர் மண்ணே’ லிரிக் வீடியோ

கங்குவா திரைப்படம் முதலில் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தனர். ஆனால் அதே தேதியில் ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படம் வெளியாவதால் கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. இத்திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ‘கங்குவா’ படத்தின் புரொமோஷன் பணிகளை அடுத்த வாரத்தில் இருந்து தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் தேதி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி வரும் 20-ம் தேதி சென்னையில் கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Latest News