நடிகர் உபேந்திரா ‘கூலி’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதன் காரணம் இதுதானா – அவரே சொன்ன தகவல்
லோகேஷ் உடன் கூட்டணி வைத்த ரஜினி தனது 171-வது படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் கூலி படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமத்தை 65 கோடிக்கு விற்பனை செய்ய படத்தின் தயாரிப்பு நிறுவனம் பேரம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
நடிகர் உபேந்திரா ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதன் காரணம் இதுதான் என்று வெளிபடையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 வது திரைப்படமாக உருவாகி உள்ள திரைப்படம் வேட்டையன். இந்தப்படத்தை ஜெய்பீம் திரைப்பட புகழ் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார். இந்தபடத்தில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முக்கியரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. வேட்டையன் திரைப்படம், வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து லோகேஷ் உடன் கூட்டணி வைத்த ரஜினி தனது 171-வது படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அன்பறிவு ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
தளபதி விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ மற்றும் ‘லியோ’ என இரண்டு ஹிட் படங்களையும், உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ‘விக்ரம்’ என்கிற பிளாக்பஸ்டர் வெற்றி படத்தையும் இயக்கிய லோகேஷ் கனகராஜ், முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.
விறுவிறுப்பாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் அறிமுக போஸ்டர் கடந்த 28-ம் தேதியில் இருந்து படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் முன்னதாக மலையாள நடிகரான சௌபின் ஷாகிரின் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டது. இவரைத் தொடர்ந்து டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் நாகர்ஜுனாவின் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டது. பின்னர் வரிசையாக ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா ஆகியோரின் போஸ்டர்களும் வரிசையாக படக்குழு வெளியிட்டது. இந்தப் படத்தில் ரஜினியின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன்படி ரஜினி இந்த படத்தில் தேவா என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
ரஜினியின் கூலி படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமத்தை 65 கோடிக்கு விற்பனை செய்ய படத்தின் தயாரிப்பு நிறுவனம் பேரம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த டீல் முடிக்கப்பட்டால் அதிக விலைக்கு விற்பனையான தமிழ் திரைப்படமாக கூலி படம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டு வித்யாசமான கதைக்களம் கொண்ட படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Also read… ”ஜனநாயகத்தின் தீபம் ஏற்றுபவர் வருகிறார்”… தளபதி 69 படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!
இந்த நிலையில் கன்னட நடிகர் உபேந்திரா ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கான காரணத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சென்னையில் என்னுடைய படத்தின் இறுதிகட்ட பணிகளுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கும்போது லோகேஷ் கனகராஜ் என்னை வந்து சந்திக்கப் போவதாக மெசேஜ் வந்தது. உடனடியாக அவரை சந்தித்தேன். லோகேஷ் கனகராஜ் வந்து கூலி படத்தின் கதை பற்றியும் என்னுடைய போர்ஷன் பற்றியும் கூற ஆரம்பித்தார். நான் உடனடியாக அதெல்லாம் வேண்டாம். அவர் யாரு தெரியுமா? சூப்பர் ஸ்டார்! அவர் பின்னாடி நிக்கிற சீனாக இருந்தாலும் நடிக்கிறேன். ரஜினிகாந்த் படத்தை வேண்டாம் என்று எந்த நடிகர் சொல்வார் என்று கூறினேன். இப்படித்தான் அந்த படத்தில் இணைந்தேன் எனக் கூறியுள்ளார். உபேந்திரா, விஷால் நடிப்பில் வெளிவந்த சத்யம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.