Actress Sobhita: பிரபல கன்னட நடிகை ஷோபிதா தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி!

நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவரது அறைக்கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. தட்டிப்பார்த்தும் எந்தவித பதிலும் வராத நிலையில் சுதிர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது தான் இந்த அதிர்ச்சிகரமான விஷயம் தெரிந்துள்ளது.

Actress Sobhita: பிரபல கன்னட நடிகை ஷோபிதா தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகை ஷோபிதா

Published: 

02 Dec 2024 07:16 AM

கன்னடத்தில் பிரபல சின்னத்திரை நடிகையாக வலம் வந்த ஷோபிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.ஹைதராபாத்- மும்பை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள புறநகர் பகுதியான கச்சிபௌலி என்ற இடம் உள்ளது. இப்பகுதியில் உள்ள ஸ்ரீராம் நகர் காலனி சிப்லாக்கில் உள்ள தனது வீட்டில் மின்விசிறியில் ஷோபிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. கன்னட திரையுலகைச் சேர்ந்த சோபிதா கன்னடம் மற்றும் தெலுங்கில் பல சீரியல்களில் நடித்துள்ளார். இதன்மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். குறிப்பாக இவருக்கு தெலுங்கு ரசிகர்கள் அதிகம் என கூறப்படுகிறது.

Also Read: மோகன்லாலை பார்க்க வந்த மகன் பிரணவ்… உள்ளே விடாத செக்யூரிட்டி.. ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷாக் சம்பவம்!

சோபிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக அவரது குடும்பத்தினர் கச்சிபௌலி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தற்கொலை என வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இதுதொடர்பாக ஷோபிதா குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சகலேஷ்பூரைச் சேர்ந்த ஷோபிதா ஆரம்பத்திலிருந்தே நடிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்.வாய்ப்புகள் தேடி அலைந்த அவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர் புகழ்பெற்றார். மேலும் அட்டெம்ப்ட் டு மர்டர் மற்றும் ஜாக்பாட் ஆகிய படங்களிலும் நடித்தார். இதனிடையே உடல் பிரம்மகண்டு, நினிடேல் தொடர்கள் மூலம் பிரபலமான ஷோபிதா கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் கணவர் சுதீருடன் ஹைதராபாத்தில் வசித்து வந்தார்.

ஷோபிதா தற்கொலை செய்து கொண்ட காரணம் பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும் என கூறப்படுகிறது. பிரேத பரிசோதனைக்கு பின், அவரது உடல் பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஷோபிதா மறைவுக்கு சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “பேய் பிடிச்சிருக்கு” பெண்ணை கட்டி வைத்து சித்ரவதை.. கம்பியால் சூடுவைத்த கொடூரம்!

வலுக்கும் சந்தேகம்

அவரது கணவர் வேலை காரணமாக சனிக்கிழமை இரவு மற்றொரு அறையில் தூங்கியுள்ளார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவரது அறைக்கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. தட்டிப்பார்த்தும் எந்தவித பதிலும் வராத நிலையில் சுதிர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது ஷோபிதா தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்ததாக சொல்லப்படுகிறது.திருமணத்துக்குப் பின் அவர் பெரிய அளவில் நடிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இதனிடையே ஷோபிதாவின் தற்கொலை குறித்து பரவலாக சந்தேகம் எழுவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் தெரிவித்துள்ளனர். ஆனால் கணவன், மனைவி இருவரும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும்,அவர்களுக்குள் எந்தவித பிரச்னையும் இல்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், சமீபத்தில் இருவரும் ஒன்றாக கோவாவிற்கு சுற்றுலா சென்றதாக சொல்லப்படுகிறது. கோவாவில் இருந்து வந்து ஓரிரு நாள்தான் ஆகும் நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலைக்கு முன்பாக அவர் பெங்களூரில் உள்ள தனது குடும்பத்தினருடன் நீண்ட நேரம் பேசியதாக கூறப்படுகிறது. நேற்று (டிசம்பர் 1) அதிகாலை 3-4 மணியளவில் சோபிதா தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். திரையுலகில் பிரபலமாகிய நிலையில் திருமணத்துக்குப் பின் நடிக்க அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை என்றும், இதனால் ஷோபிதா விரக்தியில் இருந்ததாகவும் கூறப்படுவதால் போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனஅவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபகாலமாக திரையுலகைச் சேர்ந்தவர்கள் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை தொழில் பிரச்னை, குடும்ப தகராறு ஆகியவை காரணமாக நாடுகின்றனர். இதனை தடுக்க அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050

40 வயதிற்கு பிறகு கைவிட வேண்டிய பழக்கங்கள்..!
பூண்டு சாப்பிடுவது யாருக்கு நல்லதல்ல..?
கலைக்கட்டும் கல்யாணம்... சோபிதாவின் போட்டோஸ் இதோ
விஜய்யா? ரஜினியா? யாருக்கு அதிக சம்பளம்?