வெறுப்பை பரப்பாதீங்க… அட்லியை உருவ கேலி செய்ததாக எழுந்த சர்ச்சை – கபில் சர்மா விளக்கம்
Director Atlee: இந்தியில் பிரபல டிவி நிகழ்ச்சியான கபில் சர்மா நிகழ்ச்சிக்கு சமீபத்தில் அட்லி மற்றும் பேபி ஜான் படக்குழுவினர் சென்றுள்ளனர். அங்கு இயக்குநர் அட்லியின் தோற்றம் குறித்து கபில் கிண்டலடிக்கும் விதமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அட்லியை உருவ கேலி செய்த்தாக எழுந்த சர்ச்சை இணையத்தில் வைரலான நிலையில் நடிகர் கபில் சர்மா வெறுப்பை பரப்பாதீங்க என்று தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரமாண்ட இயக்குநர் என்று கொண்டாடப்படும் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி தற்போது பாலிவுட் வரை சென்று கலக்கி வருபவர் தான் இயக்குநர் அட்லி. இவர் 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் ஆர்யா, ஜெய், நஸ்ரியா, நயன்தாரா, சந்தானம், சத்யராஜ் என பலர் நடித்துள்ள்னர். காதல் தோல்விக்குப் பின்பு அமையும் வாழ்க்கையும் நல்லா தான் இருக்கும் என்பதை கருவாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்திற்கு முன்பு பெரிய ஹிட் எதுவும் கொடுக்காமல் இருந்த நயன்தாராவிற்கு இந்தப் படம் கம்பேக்காக அமைந்தது என்றே கூறலாம். படம் சூப்பர் ஹிட் அடித்தது. இயக்குநர் அட்லி தனது 2-வது படத்திலேயே தளபதி விஜயுடன் கூட்டணி வைத்தார். இவர்களது கூட்டணியில் உருவான தெறி சூப்பர் ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து தனது மூன்றாவது மற்றும் நான்காவது படத்திலும் நடிகர் விஜயை நாயகனாக வைத்தே படத்தை இயக்கினார் அட்லி.
Also read… ஏ.ஆர்.முருகதாஸ் – சிவகார்த்திகேயன் படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் எப்போது? வைரலாகும் அப்டேட்
இது தொடர்பாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்தபோது, ‘என் அண்ணனுக்கு நான் தான்டா செய்வேன்’ என்று அப்போதும் மாஸ் ரிப்ளை கொடுத்தார் அட்லி. நடிகர் விஜயுடன் தொடர்ந்து 3 படங்களையும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநர் அட்லிக்கு அடுத்த வாய்ப்பு பாலிவுட்டில் இருந்து வந்தது. பாலிவுட் பாட்ஷா, கிங் கான் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் உடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அட்லியை தேடி வந்தது. ஷருக்கானை வைத்து ஜாவான் என்ற படத்தை எடுத்து பாலிவுட் பாக்ஸ் ஆபிஸை தெரிக்கவிட்டார் அட்லி.
அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட் முன்னணி நடிகர்கள் பலர் அட்லியின் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். தற்போது தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி ஜான் என்ற படத்தை அட்லி தயாரித்துள்ளார். படக்குழு தற்போது இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
Also read… நான் விக்னேஷ் சிவனை திருமணமே செய்திருக்க கூடாது… வைரலாகும் நயன்தாரா பேச்சு
அந்த வகையில் இந்தியில் பிரபல டிவி நிகழ்ச்சியான கபில் சர்மா நிகழ்ச்சிக்கு சமீபத்தில் அட்லி மற்றும் பேபி ஜான் படக்குழுவினர் சென்றுள்ளனர். அங்கு இயக்குநர் அட்லியின் தோற்றம் குறித்து கபில் கிண்டலடிக்கும் விதமாக கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அட்லி, ”தோற்றத்தை வைத்து எடைபோடாதீங்க. மனது எப்படி இருக்கிறது என பார்த்து எடைபோடுங்க” என்று மாஸாக பதிலளித்துள்ளார்.
Dear sir, can you pls explain me where n when I talked about looks in this video ? pls don’t spread hate on social media 🙏 thank you. (guys watch n decide by yourself, don’t follow any body’s tweet like a sheep). https://t.co/PdsxTo8xjg
— Kapil Sharma (@KapilSharmaK9) December 17, 2024
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய கபில் சர்மா, அட்லியின் உருவம் பற்றி நான் எங்கே பேசி இருக்கிறேன் என்று அந்த வீடியோவில் காட்டுங்கள். முழு வீடியோவையும் பார்த்து முடிவு பண்ண வேண்டும் என அவர் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.