5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Darshan : கொலை வழக்கு.. கன்னட நடிகர் தர்ஷன் சினிமாவில் நடிக்க தடையா?

காமாக்‌ஷிபாலயா போலீசார் நடிகர் தர்ஷனை மைசூருவில் கடந்த ஜூன் 11-ம் தேதி கைது செய்தனர். பின்னர் தர்ஷனுடன் சேர்த்து இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் போலீசார் பெங்களூரு அழைத்து வந்தனர். இந்த குற்றச்சாட்டை அடுத்து அவருக்கு கன்னட திரைத்துறையில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

Darshan : கொலை வழக்கு.. கன்னட நடிகர் தர்ஷன் சினிமாவில் நடிக்க தடையா?
கன்னட நடிகர் தர்ஷன்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 14 Jun 2024 10:40 AM

நடிகர் தர்ஷன் : கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி, பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைதான நிலையில் அவர் சினிமவில் நடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி, பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபாவை மைசூரில் வைத்து காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்த ரேணுகா சுவாமி என்பவர். இந்நிலையில் காமாக்‌ஷிபாலயா என்ற இடத்தில் கடந்த ஜூன் 9ஆம் தேதி ரேணுகா சுவாமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, காமாக்‌ஷிபாலயா போலீசார் ரேணுகா சுவாமி உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தனியார் மருந்தகத்தில் வேலை பார்த்துவந்த இவர், நடிகர் தர்ஷனுக்கு நெருங்கிய தோழியான பவித்ரா கவுடா என்பவருக்கு அடிக்கடி ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி தொந்தரவு செய்து வந்ததாக போலீஸ் விசாரனையில் தெரியவந்துள்ளது.

நடிகர் தர்ஷன்  தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரும் ஆவார். கன்னட சினிமாவின் முன்னணி சமகால நடிகர்களில் ஒருவரான, தர்ஷன் 2006 இல் தூகுதீபா புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார். கன்னட சினிமாவில் ‘அனதரு’, ‘கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற நடிகர் தர்ஷன். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘காடேரா’ திரைப்படம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர் ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்த வழக்கில் கடந்த 11-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

Also read… பிரேம்ஜி திருமணம்… இணையத்தில் பரவும் வதந்திகள்… முற்றுப்புள்ளி வைத்த வெங்கட் பிரபு!

கர்நாடகாவின் சித்ரதுர்காவைச் சேர்ந்தவர் ரேணுகாசுவாமி. தனியார் மருந்தகத்தில் வேலை பார்த்துவந்த இவர், நடிகர் தர்ஷனுக்கு நெருங்கிய தோழியான பவித்ரா கவுடா என்பவருக்கு அடிக்கடி ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி தொந்தரவு செய்து வந்த நிலையில், கொல்லபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் நான்கு பேர் குற்றம்சாட்டப்பட்டு அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பணத்திற்காக ரேணுகா சுவாமியை கொலை செய்ததாக கூறியுள்ளனர். மேலும், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கன்னட நடிகர் தர்ஷன் இந்த கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, காமாக்‌ஷிபாலயா போலீசார் நடிகர் தர்ஷனை மைசூருவில் கடந்த ஜூன் 11-ம் தேதி கைது செய்தனர். பின்னர் தர்ஷனுடன் சேர்த்து இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் போலீசார் பெங்களூரு அழைத்து வந்தனர். இந்த குற்றச்சாட்டை அடுத்து அவருக்கு கன்னட திரைத்துறையில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இதுகுறித்து விவாதிப்பதற்காக கர்நாடக திரைப்பட வா்த்தக சபை தலைவர் என்.எம்.சுரேஷ் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு என்.எம்.சுரேஷ் நிருபர்களிடம் கூறியதாவது, ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னட திரைத்துறையில் தர்ஷன் மிகப்பெரிய நடிகர். இந்த கொலையை நாங்கள் கண்டிக்கிறோம். ரேணுகாசாமியின் குடும்பத்திற்கு நாங்கள் ஆறுதல் தெரிவிக்கிறோம். சினிமாவில் நடிக்க தர்ஷனுக்கு தற்போதைக்கு தடை விதிக்கவில்லை. வர் குற்றவாளி என்று முடிவு செய்யப்பட்டால், அதன் பிறகு நாங்கள் மீண்டும் கூடி ஆலோசித்து தடை விதிப்பது குறித்து முடிவு எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Latest News