ஷாக் ஆன ஷாருக்கான்.. வசூல் வேட்டையில் புஷ்பா-2.. பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் லீக்!
Pushpa 2 Movie Box Office Collection: நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா-2 படம் ரூ.1,000 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. பாகுபலி-2 மற்றும் கே.ஜி.எஃப் 2 ஆகிய பட வசூல்களுக்கு போட்டியாக புஷ்பா2 இந்த மகத்தான சாதனையை படைத்துள்ளது.
புஷ்பா-2 தி ரூல் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன்: இயக்குனர் சுகுமார் டைரக்ஷனில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள புஷ்பா-2 தி ரூல் படம் கடந்த 10 நாள்களில் ரூ.1,200 கோடி வசூலை நெருங்கிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ஷாருக்கானின் ஜவான் படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளியுள்ளது. இதற்கிடையில், அல்லு அர்ஜுனின் கைதுக்கு பின்னர் படம் உள்நாட்டு சந்தையில் 74% மற்றும் உலகளவில் 70% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸ் வசூல்
இதற்கிடையில், புஷ்பா-2 தி ரூல் திரைப்படம் டிச.14, 2024 நிலவரப்படி, உலகளவில் ரூ.1196 கோடியை வருவாய் ஆக ஈட்டியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வெள்ளிக்கிழமை ரூ.51 கோடி வசூலித்து இருந்தது.
தொடர்ந்து, டிச.14 சனிக்கிழமை படம் ரூ.86 கோடியை ஈட்டியுள்ளது. அதாவது, படத்தின் பிரீமியர் ஷோவில் ரசிகையின் மரணத்தை தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் ஹைதராபாத் காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஒரு நாளில் படத்தின் வசூலில் 70% முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தங்கத் தாமரை மகளே… மாளவிகா மோகனனின் நியூ ஆல்பம்!
ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய அல்லு அர்ஜுன்
புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸில் ஷாருக்கானின் ஜவானை பின்னுக்கு தள்ளியுள்ளது. வசூலில் யாஷின் கேஜிஎஃப்: அத்தியாயம் 2 க்கு அருகில் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், ராஜ மெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தை பின்னுக்கு தள்ளும் எனக் கூறப்படுகிறது.
அந்த வகையில் புஷ்பா உள்நாட்டில் ரூ.826 கோடியும், வெளிநாடுகளில் ரூ.210 கோடியும் வசூலித்துள்ளது. இந்தத் தகவலை சேக்னிக் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் வசூல் எப்படி?
புஷ்பா-2 படம் வெளிநாட்டில் பாகுபலி-2 படத்தை முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், டங்கல் படத்தை முந்த வாய்ப்புகள் குறைவு. ஏனெனில், வெளிநாடுகளில் அதிக பணம் ஈட்டிய படத்தில் டங்கல் முதலிடத்தில் உள்ளது.
புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் புஷ்பா ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அவரை அகில இந்திய அளவில் பெரிய ஸ்டார் ஆக மாற்றியுள்ளது. இதற்கிடையில் கடந்த வாரம் புஷ்பா-2 இரண்டாம் பாகம் வெளியானது. இந்தப் படத்தின் பிரீமியர் காட்சியின் போது, ஹைதராபாத்தில் பெண் ஒருவர் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தார். இது தொடர்பாள வழக்கில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு தெலங்கானா உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதையடுத்து, அவர் விடுவிக்கப்பட்டார். அவரின் கைது படத்தின் வசூலை பாதிக்கவில்லை. மாறாக, படத்தின் வருவாயை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Did you know: இந்தியாவில் 1000 கோடி ஹிட் கொடுத்த முதல் நடிகை இவரா..? பட்டியலில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் மிஸ்..!